இஸ்லாமாபாத்: இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆலோசனை நடத்த இந்தியாவுக்கான தூதரை அவசரமாக திரும்ப அழைத்திருக்கிறது பாகிஸ்தான்.
புல்வாமா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் திரும்ப அழைக்கப்பட்ட நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு, அவசர ஆலோசனை நடத்துவது என்ற பெயரில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை புது தில்லியில் இருந்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் மஹ்மூத் பாகிஸ்தான் கிளம்பியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆலோசனை நடத்துவதற்காக அவர் அழைக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி மோதி வெடிக்க செய்ததில் 43 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் நாடு திரும்புமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. புல்வாமா தாக்குதலைக்கு எதிர்வினையாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கருதப்படுகிறது.
முன்னதாக புதுதில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழம்பெரும் பாலிவுட் நடிகர் பாரத் கபூர் காலமானார்

வழக்குரைஞரான பேரறிவாளன்! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு!
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


