ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இந்தியாவின் மிஷன் சக்தியால் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆபத்து: கதறும் நாசா

விண்வெளியில் இருந்த செயற்கைக் கோளை இந்தியா தாக்கி அழித்தது மிக மோசமான சம்பவம் என்று வர்ணித்திருக்கும் நாசா, இதனால் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.

News image
Updated On :2 ஏப்ரல் 2019, 9:46 am


வாஷிங்டன்: விண்வெளியில் இருந்த செயற்கைக் கோளை இந்தியா தாக்கி அழித்தது மிக மோசமான சம்பவம் என்று வர்ணித்திருக்கும் நாசா, இதனால் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.

இந்தியா தாக்கி அழித்த செயற்கைக் கோள் தற்போது 400 துண்டுகளாகச் சிதறி, விண்வெளியில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. இது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் மோதி சேதம் ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக நாசா கூறுகிறது.

நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் கூறுகையில், இதுவரை 60 துண்டுகள் எங்கெங்கே சிதறிக் கிடக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளோம். இது மிகவும் மோசமான விஷயம். சர்வதேச விண்வெளி மையத்தின் மீது இந்த துண்டுகள் அல்லது துகள்கள் பயணிப்பது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும்.

இந்தியா பரிசோதித்த ஏசாட் சோதனையால், இந்திய செயற்கைக் கோளை தாக்கவிருந்த செயற்கைக் கோள் தாக்கி அழிக்கப்பட்டு தற்போது 400 துண்டுகளாக விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது வரை அவற்றை கண்டறியும் பணியில் நாசா ஈடுபட்டுள்ளது. தற்போதுள்ள தொழில்நுட்ப உதவியுடன் 10 செ.மீ. மற்றும் அதற்கு மேல் இருக்கும் துண்டுகளை மட்டுமே கண்டுபிடிக்க முடியும். தற்போது வரை 60 துண்டுகளைக் கண்டுபிடித்துள்ளோம். அதில் 24 துண்டுகள் விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஆபத்தான வகையில் பயணித்து வருகிறது என்றார்.

இதுபோல ஒரு நாடு செய்தால், பிற நாடுகளும் இதை முயற்சித்துப் பார்க்கும். இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதனால் நாசாவுக்கு ஏற்படும் பாதிப்பு விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டியது இருக்கிறது. இதுபோன்ற விஷயங்கள் குறித்து நாசா ஒவ்வொரு மணி நேரமும் புதிது புதிதாக பல விஷயங்களைக் கற்றுக் கொண்டே வர வேண்டிய நிலையும் உள்ளது. இந்தியாவின் மிஷன் சக்தி திட்டத்தால், நாசாவுக்கான ஆபத்து அளவு தற்பொழுது 44% ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.