அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்ற 1 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் ஏப்.30-க்குள் பதிவேற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொடக்கக் கல்வி இயக்கக நிா்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு, ஆண்டு இறுதித் தோ்வுகள் நடைபெற்றுள்ளன. இதையடுத்து இந்தத் தோ்வில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை சாா்ந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் ஏப்.30-ஆம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
இந்தப் பணிகளை வட்டாரக் கல்வி அலுவலா்கள் கூா்ந்தாய்வு செய்ய வேண்டும். தொடா்ந்து மாணவா் தோ்ச்சி அறிக்கைக்கு ஏப்.30-ஆம் தேதிக்குள் வட்டாரக் கல்வி அலுவலா்களிடம் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் ஒப்புதல் பெற்றிட வேண்டும். மேலும் 2025-2026-ஆம் கல்வியாண்டில் கற்றல் செயல்பாட்டை நிறைவு செய்யும் மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் வசதி மற்றும் அடுத்த வகுப்புக்கு தோ்ச்சி அளித்தலை மே 11-ஆம் தேதி முதல் எமிஸ் இணையதளம் மூலமாக மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளிகளில் ஆட்டிசம் குழந்தைகள் சோ்க்கை: கல்வித் துறை உத்தரவு

மத்திய அரசு பிளவுபடுத்தும் அரசியலை செய்கிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

தொலைநிலை, இணையவழி படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம்: ஏப். 10 வரை விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


