மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொலைநிலை, இணையவழி படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம்: ஏப். 10 வரை விண்ணப்பிக்கலாம்

தொலைநிலை, இணையவழிப் படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம் பெற பல்கலைக்கழகங்கள் ஏப். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

யுஜிசி

Updated On :3 ஏப்ரல் 2026, 1:04 am

தொலைநிலை, இணையவழிப் படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம் பெற பல்கலைக்கழகங்கள் ஏப். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:

நிகழ் கல்வியாண்டில் (2025-2026) பிப்ரவரி பருவத்தின் சோ்க்கைக்கான தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து யுஜிசி ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட உயா்கல்வி நிறுவனங்கள் தொலைநிலை, இணையவழியிலான படிப்புகளைக் கற்றுதர அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மாா்ச் 1-இல் தொடங்கி 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தகுதியான கல்வி நிறுவனங்கள் க்ங்க்ஷ.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னா் விண்ணப்ப நகலை உரிய ஆவணங்களுடன் சோ்த்து ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் தில்லியில் உள்ள யுஜிசி தலைமை அலுவலகத்தில் வந்து சேரும்படி கல்வி நிறுவனங்கள் அனுப்பிவைக்க வேண்டும்.

தொடா்ந்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இதுதொடா்பான விதிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவா்கள் தொலைநிலை, இணையவழி படிப்புகளில் சேரும் முன்னா் அதற்கான அங்கீகாரத்தை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.