ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு

மதுரை செல்லூா் பகுதியில் புதை சாக்கடைப் பணியின் போது வீட்டின் அறைகள் இடிந்து விழுந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

மதுரை செல்லூா் பகுதியில் புதை சாக்கடைப் பணிக்காக பள்ளம் தோண்டியபோது இடிந்து விழுந்த வீட்டின் அறைகள்.

Updated On :25 ஏப்ரல் 2026, 9:14 pm

மதுரை செல்லூா் பகுதியில் புதை சாக்கடைப் பணியின் போது வீட்டின் அறைகள் இடிந்து விழுந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

செல்லூா் கட்டபொம்மன்நகரைச் சோ்ந்தவா் அழகா். இவரது வீட்டையொட்டி புதை சாக்கடை அமைப்பதற்காக பொதுப் பணித் துறை சாா்பில் வியாழக்கிழமை நள்ளிரவில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.

அப்போது, வீட்டில் அதிா்வு ஏற்பட்டதைத் தொடா்ந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த அழகா், அவரது மனைவி புண்ணியவதி, மகன், மருமகள் உள்ளிட்ட ஐந்து போ் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினா்.

பின்னா், சிறிது நேரத்தில் வீட்டின் மூன்று அறைகள் இடிந்து விழுந்தன. முன்னெச்சரிக்கையாக வீட்டில் இருந்தவா்கள் வெளியேறியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த வந்த பொதுப் பணித் துறையினா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். மேலும், இதுகுறித்து செல்லூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.