மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நாங்கள் போருக்குத் தயார்: தோள் தட்டும் பாகிஸ்தான் ராணுவம்

நாங்கள் போருக்குத் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :23 செப்டம்பர் 2018, 8:26 am

இஸ்லாமாபாத்: நாங்கள் போருக்குத் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநில காவலர்கள் மூவர் பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்ட காரணத்தால், இம்மாத இறுதியில் நடப்பதாக இருந்த இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு ரத்து செய்ய்ப்படுவதாக இந்தியா அறிவித்தது. 

அதனைத் தொடர்ந்து தில்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த ராணுவத் தளபதி பிபின் ராவத், 'பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக நமது நடவடிக்கை அவசியம், ஆனால், மிகக்கொடூரமாக அல்ல. இதற்கு முன் அவர்களுக்கு எதிராக பல ஆபரேஷன்களை நாம் நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் போன்று நாம் ஒருபொழுதும் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளவில்லை' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நாங்கள் போருக்குத் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார். 
 
இதுதொடர்பாக அந்தநாட்டுச் செய்தித் தொலைக்காட்சி  ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தான் ராணுவம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதிக்காகத் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடி வருகிறது. அதன் காரணமாக ஏராளமான உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளோம். எங்களுக்கும் அமைதியின் விலை என்ன என்பது தெரியும்.

நாங்கள் ஒருபோதும் பாதுகாப்பு படை வீரர்களை மரியாதைக் குறைவாக நடத்தியது இல்லை. இதற்கு முன்னர் இது போன்ற சம்பவங்கள் நடந்த போதும் எங்கள் மீதுதான் இந்திய ராணுவம் குற்றம் சுமத்தியது. நாங்கள் முறையான, நேர்மையான ராணுவப் படையினர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம்.

நாங்கள் போருக்கு எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால், மக்களின் நலனுக்காகவும், அண்டைநாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே அமைதிப்பாதையில் செல்கிறோம். 

இவ்வாறு கபூர் தனது பேட்டியில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.