பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வாக்காளர் பட்டியலில் காணாமல் போன பிரதமர் வேட்பாளர் மருமகள்!

பிஎம்எல்-என் கட்சித் தலைவர் ஷேபாஸ் ஷெரீஃப் மருமகள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :25 ஜூலை 2018, 10:40 am

பிஎம்எல்-என் கட்சித் தலைவர் ஷேபாஸ் ஷெரீஃப் மருமகள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனாமா ஊழல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சகோதரர் ஷேபாஸ் ஷெரீஃப், பிஎம்எல்-என் கட்சித் தலைவர் மற்றும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது மருமகள் சைனாப். 

இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க வந்தபோது லாஹூரில் உள்ள வாக்குச் சாவடியில் இடம்பெற்றுள்ள வாக்காளர் பட்டியலில் சைனாப் பெயர் இடம்பெறவில்லை. அங்கு கடந்த முறை ஆட்சியில் இருந்த பிரதான கட்சியின் பிரதமர் வேட்பாளரின் மருமகள் பெயர் அவருடைய சொந்த வாக்குச் சாவடியிலேயே இடம்பெறாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் தற்போது தான் 2-ஆவது முறையாக பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சுமார் 106 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட அங்கு எந்தவொரு பிரதமரும் இதுவரை 5 ஆண்டுகள் வரையிலான தனது  முழு ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்தது கிடையாது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.