முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கராச்சியில் விநோதம்: புத்தாண்டு கொண்டாட்ட ஆர்வமிகுதியில் துப்பாக்கிச்சூடு!

கராச்சி புத்தாண்டு கொண்டாட்ட ஆர்வமிகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலர் படுகாயமைடந்தனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:52 am

Raghavendran

உலகம் முழுவதும் 2018-ம் ஆண்டை வரேவற்கும் விதமாக மக்கள் அனைவரும் ஆங்காங்கே ஒன்று திரண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த கொண்டாட்டங்களின் போது புத்தாண்டை வரவேற்க வானவேடிக்கை நிகழ்ச்சிகள் பிரதான இடம் பிடிக்கின்றன. பின்னர் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி வாழ்த்துகளை பரிமாரிக்கொண்டனர்.

ஆனால் பாகிஸ்தானில் நடந்த வித்தியாசமான புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக பலர் படுகாயமடைந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக நடந்த கொண்டாட்டங்களின் போது ஆர்வமிகுதியால் சிலர் தங்களின் துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கியுள்ளனர். அதில், பெண் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் அருகிலிருந்த ஜின்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை அளித்த பின்னர் அவர்களின் உயிருக்கு பாதிப்பில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.