புகையிலை பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் விதமாக இலங்கை அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக முதலில் 100 மாவட்டங்களில் அதன் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கும் விதமாக அந்நாட்டு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில், முதல்கட்டமாக 100 மாவட்டங்கல் சிகிரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை செவ்வாய்கிழமை முதல் நிறுத்தியுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் இருந்தும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதாக இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் ரஞ்சித் சேனரத்னே தெரிவித்துள்ளார். மேலும் 2019-ஆம் ஆண்டுக்குள் இதனை 200 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்துவதுதான் தனது இலக்கு என்றும் கூறினார்.
தற்போது, ஜாஃப்னாவில் 22, மதாராவில் 17, குருணிகலாவில் 16 உள்ளிட்ட மொத்தமுள்ள அனைத்து மாகாணங்களிலும் சேர்த்து 107 மாவட்டங்கள் இம்முயற்சியில் களமிறங்கியுள்ளன.
அதுமட்டுமல்லாமல் புகையிலைப் பொருட்கள் மீதான வரி 90 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புகையிலைப் பொருட்கள் மீது 80 சதவீத அளவுக்கு அதன் தீமையை விளக்கும் விதமாக வாசகங்கள் மற்றும் புகைப்படங்கள் அமைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் பொது இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2020-ஆம் ஆண்டுக்குள் இலங்கை முழுவதும் புகையிலை உற்பத்திக்கு நிரந்தர தடை விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

ஈரோடு, கோபி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
இன்றைய ராசி பலன் (25.04.2026) -சிம்மம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


