அடுத்தாண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க சிறப்பு வருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது நாட்டின் கலாசாரம், பண்பாடு மற்றும் ராணுவம், கப்பல்படை மற்றும் விமானப்படை என முப்படை அணிவகுப்பு ஆகியவை நடைபெறும். இந்த தருணத்தின் போது ஏதேனும் ஒரு நாட்டைச் சேர்ந்த முக்கிய தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்படும்.
அவ்வகையில், 2019-ஆம் ஆண்டுக்கான குடியரசு தின விழாவின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க உள்துறை செயலர் மைக் போம்பே மற்றும் பாதகாப்பு செயலர் ஜேம்ஸ்.என்.மேட்டீஸ் ஆகியோர் அடுத்த மாதம் இந்தியா வந்தபின்னர் அங்கு நடைபெறவுள்ள இருநாடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்து குடியரசு தின விழாவுக்கு அமெரிக்க அதிபர் கலந்துகொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2018-ஆம் ஆண்டுக்கான குடியரசு தின விழாவின் போது ஆசியான் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அதுபோல கடந்த 2015-ஆம் ஆண்டு 65-ஆவது குடியரசு தின விழாவின் போது அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


