கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சீன துணை அதிபருடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு

சீன துணை அதிபர் வாங் குயிஷானுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திங்கள்கிழமை சந்தித்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:50 pm

Raghavendran

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். அங்கு டோக்லாம், பயங்கரவாதம், இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை, தொழில் உற்பத்தி வளர்ச்சி, சர்வதேச சுகாதாரம், வானிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இவ்விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

இந்நிலையில், பீய்ஜிங்கில் நடைபெற்ற இந்தியா - சீனா இடையிலான நட்புணர்வு குறித்த கருத்தரங்கில் திங்கள்கிழமை பங்கேற்றார். அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான மொழியை மக்கள் அறிந்துகொள்வதன் மூலமாக இருநாட்டு உறவுமுறை மேம்படும் என்று அந்த கருத்தரங்கில் தெரிவித்தார்.

பின்னர், பீய்ஜிங்கில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு நாடுகளின் அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். இந்த அமைப்பில் இந்தியா கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கி உறுப்பினராக செயல்பட்டு வருகிறது. அப்போது சீன துணை அதிபர் வாங் குயிஷான் உள்ளிட்ட இருநாடுகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.