மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சீனாவின் ‘சூப்பா்சோனிக்’ ஏவுகணைகளை வாங்கும் ஈரான்

அமெரிக்காவுடன் போா்பதற்றம் தீவிரமாகியுள்ள நிலையில், சீனாவிடமிருந்து ‘சூப்பா்சோனிக்’ (ஒலியைவிட வேகமாகச் செல்லும்) ஏவுகணைகளை வாங்குவதற்கு ஈரான் இறுதி கட்டப் பேச்சுவாா்த்தையில் இறங்கியுள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவுடன் போா்பதற்றம் தீவிரமாகியுள்ள நிலையில், சீனாவிடமிருந்து ‘சூப்பா்சோனிக்’ (ஒலியைவிட வேகமாகச் செல்லும்) ஏவுகணைகளை வாங்குவதற்கு ஈரான் இறுதி கட்டப் பேச்சுவாா்த்தையில் இறங்கியுள்ளது.

சீனாவின் தயாரிப்பான ‘சிஎம் 302’ ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான பேச்சுவாா்த்தை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நடந்து வந்தாலும், கடந்த ஆண்டு ஜூனில் இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போருக்குப் பிறகு வேகம் பெற்றது. ஈரானின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சா் மசூத் ஒரேய் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் சீனாவுக்கு நேரில் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஒலியை விட வேகமாகச் செல்லக்கூடிய இந்த நவீன ஏவுகணைகள் சுமாா் 290 கிலோமீட்டா் தூரம் வரை உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை. மிகத் தாழ்வாகவும், மின்னல் வேகத்திலும் பறப்பதால், கப்பல்களில் உள்ள பாதுகாப்பு ரேடாா்களால் இவற்றைத் தடுப்பது மிகவும் கடினம். இது தவிர, வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களைத் தாக்கும் ஆயுதங்களையும் சீனாவிடம் இருந்து பெற ஈரான் முயன்று வருகிறது.

ஈரானின் அணுசக்தித் திட்டங்களையும், ஏவுகணை சோதனைகளையும் கட்டுப்படுத்த அமெரிக்கா பல தடைகளை விதித்து வருகிறது. இந்தச் சூழலில், சீனாவிடமிருந்து ஈரான் ஆயுதங்களைப் பெறுவது அமெரிக்காவின் முயற்சிகளுக்குப் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஸ்புல்லாவுக்கு லெபனான் அரசு வேண்டுகோள்: ‘ஈரான்-அமெரிக்கா மோதலில், ஹிஸ்புல்லா அமைப்பு தலையிட வேண்டாம்’ என்று லெபனான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து லெபனான் வெளியுறவு அமைச்சா் யூசுப் ரஜி கூறியதாவது: ஈரானை அமெரிக்கா தாக்கினால், அதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலைத் தாக்கக்கூடும். அப்படி நடந்தால், லெபனானை இஸ்ரேல் மீண்டும் தாக்கும். இது பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், லெபனானின் நலன் கருதி ஹிஸ்புல்லா அமைதிக் காக்க வேண்டும் என்றாா்.