தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தொலைபேசி அழைப்பை பாதியில் நிறுத்தி, நிருபரின் அழகிய புன்னகையை பாராட்டிய ட்ரம்ப்! (வீடியோ இணைப்பு)

அயர்லாந்து நாட்டின் பிரதமருடனான தொலைபேசி உரையாடலை பாதியில் நிறுத்தி விட்டு, அந்நாட்டு பெண் பத்திரிகையாளரின் புன்னகையை அதிபர் ட்ரம்ப் பாராட்டிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

News image
Updated On :29 ஜூன் 2017, 8:00 am

வாஷிங்டன்: அயர்லாந்து நாட்டின் பிரதமருடனான தொலைபேசி உரையாடலை பாதியில் நிறுத்தி விட்டு, அந்நாட்டு பெண் பத்திரிகையாளரின் புன்னகையை அதிபர் ட்ரம்ப் பாராட்டிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அயர்லாந்து நாட்டின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் லியோ வரத்கர்.அவருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து வாழ்த்தும் நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை பதிவு செய்வதற்காக வெள்ளை மாளிகையில் உள்ள 'ஓவல் அலுவலகத்தில்' இரு நாட்டு பத்திரிகையாளர்களும் குழுமியிருந்தனர். அவர்களில் அயர்லாந்தின் ஆர்.டி.ஈ நியூஸ் பத்திரிக்கையின் அமெரிக்க தலைமை செய்தியாளர் கெய்த்திரியோனா பெர்ரியும்  ஒருவர்   

லியோ வரத்கருடன் தொலைபேசி உரையாடலை துவங்கிய ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்து சாதாரணாமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்களில், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் இருக்கின்றனர் என்று ட்ரம்ப், பிரதமர் லியோவிடம் கூறினார்.  

அதன் தொடர்ச்சியாக பெரியை அதிபர் ட்ரம்ப் கைகாட்டி அவரது மேஜைக்கு அழைத்தார்.   அவர் எந்த பத்திரிக்கையைச் சேர்ந்தவர் என்பதைக் கேட்டுக் கொண்டவுடன், தொலைபேசியில் இருந்த லியோவிடம், 'இவரது சிரிப்பு மிகவும் அழகாக உள்ளது; உங்களை நன்றாக கவனித்துக் கொள்வார் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்தார்.

Story image

அதிபர் ட்ரம்பின் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பகிரப்படுகிறது. பெரியும் அதனை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி அவரிடம் கேட்ட பொழுது 'வினோதமான நிகழ்வு' என்று தெரிவித்தார். 

வீடியோ: 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.