டோக்யோ: கையில் வாங்கியவுடன் உருகி வழியும் ஐஸ்க்ரீமினை இதுவரைக் கண்டு வந்திருக்கும் நமக்கு, ஜப்பான் விஞ்ஞானிகளின் 'உருகாத ஐஸ்க்ரீம்' கண்டுபிடிப்பு ஆச்சர்யத்தினை அளிக்கிறது.
மெஷினில் இருந்து எடுத்து கோனிலோ அல்லது ஏதாவது பாத்திரத்திலோ வைத்தவுடன் உருகி வழிவது ஐஸ்க்ரீமின் இயல்பு. எனவே நாம் அதனை அவசர அவசரமாக சாப்பிட வேண்டி இருக்கும் ஆனால் தற்பொழுது 'உருகாத ஐஸ்க்ரீம்' ஒன்றினை ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜப்பானின் கனசாவா பல்கலைக்கழகத்தின் ஆய்வு விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பினை செய்துள்ளனர். இதன் மூலம் ஐக்ரீமின் வடிவம் வெகு நேரத்திற்கு மாறாமல் அப்படியே இருப்பதற்கு அதன் உருகுநிலையை அதிகரிப்பதே வழி என்று கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக கனசாவா பல்கலைக்கழக பேராசிரியர் டொமிஹிஸா ஒட்டா கூறியதாவது:
இதனை சாத்தியமாக்குவதற்கு பாலிபினால் என்ற திரவம் பயன்படுத்தப்படுகிறது. ஸ்ட்ராபெரியில் இருந்து எடுக்கப்படும் இந்த திரவம் கொண்டுள்ள தன்மையானது, இதனை பொதுவாக எண்ணெய் மற்றும் தண்ணீர் கொண்டு பிரிப்பதற்கு சிரமமாக மாற்றுகிறது.
எனவே இந்த திரவத்தினை ஐஸ்க்ரீமுடன் சேர்க்கும் பொழுது, வழக்கமான நேரத்தினை விட அதிக நேரம் ஒரே உருவத்தில் இருக்கவும், எளிதில் உருகாத ஒன்றாகவும் மாற்றுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதன்படி அறை வெப்ப நிலையில் குறைந்த பட்சம் மூன்று மணி நேரத்திற்கு ஐஸ்க்ரீம் உருகாமல் இருக்கும். இதனை சோதிப்பதற்கு அவர்கள் கேசத்தினை உலர்த்த பயன்படுத்தப்படும் 'ஹேர் ட்ரையரை' பயன்படுத்தி ஐஸ்க்ரீம் மீது தொடர்ந்து ஐந்து நிமிடம் வெப்பக்க காற்றினை செலுத்தினார்கள். ஆனால் அதற்கு பிறகும் அது தனது இயல்பான வடிவத்தினை விரைவாக அடைந்து விட்டது
இந்த ஐஸ்க்ரீமானது ஸ்ட் ராபெரி, சாக்லேட் மற்றும் வெனிலா ஆகிய சுவைகளில் கிடைக்கிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆற்காட்டில் வாக்களித்த வேட்பாளா்கள்

காஞ்சிபுரத்தில் வாக்களித்த வேட்பாளா்கள்

மீன ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


