நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாகிஸ்தானில் பலத்த மழை: வெள்ளத்தில் சிக்கி இதுவரை 71 பேர் பலி

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 71 பேர் பலியாகி உள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:57 pm

ANI

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 71 பேர் பலியாகி உள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் கைபர்-பக்துன்குவா, கில்கிட்-பல்திஸ்தானில்  ஆகிய மாகாணத்தில் உள்ள வீடுகள் பலத்த சேதமடைந்ததுள்ளன. 370-க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டு போயின.

கைபர்-பக்துன்குவா மாகாணத்தில் 48 பேரும், கில்கிட் பல்திஸ்தானில் 15 பேரும் ஹங்லா மாவட்டத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கில்கிட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகள் இழந்த நிலையில் மக்கள் தவிர்த்து வருவதாக டான் செய்திகள் கூறுகின்றன.

மார்ச் 9 முதல் ஏப்ரல் 5 வரை 212 பேர் காணாமல் போனதாகவும், 188 பேர் காயமடைந்ததாகவும், 1428 பேர் வீடுகள் இழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேசிய பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகள் உணவு, உடை, போர்வை உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.