பாலஸ்தீன தலைவர் யாசர் அராஃபத் மர்ம மரணம் குறித்து நடைபெற்று வரும் விசராணையில் முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அராஃபத்த்தின் மர்ம மரணத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக பாலஸ்தீனம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு, பிரெஞ்ச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது யாசர் அராஃபத் மர்ம நோய் ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்காலம் என கூறப்பட்டது.
இந்நிலையில் அவரது 11-வது ஆண்டு நினைவஞ்சலி நேற்று (நவ. 11) நடைபெற்றது.
அப்போது தொலைகாட்சியில் தோன்றிய பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத் அப்பாஸு, அராஃபத் மரணம் குறித்து நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. உண்மை கண்டறியப்படும் வரை விசாரணை தொடரும் என்றார்.
அராஃபத்தின் உறவினரும் படா (Fatah Party) கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான நாசர் அல்-க்யுத்வா கூறுகையில், விசாரணைக் குழு கண்டறிந்துள்ள முக்கிய தடயங்களை விரைவில் வெளியிடும் என்றார்.
விசாரணைக் குழுவின் தலைவர் தௌஃபிக் திராவி கூறுகையில், யாசர் அராஃபத் மரணம் அடைந்தபோது, மருத்துவமனையில் ஒரு மர்ம நபர் ஒருவர் இருந்துள்ளார். எனினும், அவர் யார் என்ற விவரம் குறித்த ரகசியங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
யாசர் அராஃபத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி அவர் அருகே செல்ல முயன்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் முன்னேற்றம் ஏற்பட்டால், அராஃபத்தை கொலை செய்வதற்காக நடைபெற்ற அரசியல் சூழ்ச்சிகள் வெளிவரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


