சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நிகழ்வுகள்...(03/02/2023)

Updated On :3 பிப்ரவரி 2023, 11:44 am

கும்பாபிஷேகம்
ஈரோடு அருள்மிகு கமலவல்லித் தாயார் சமேத கஸ்தூரி அரங்கநாதர் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் பிப். 3-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
•••••••
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்சீசமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவலசை காத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் பிப். 5-ஆம் தேதி காலை 11.20 மணிக்கு நடைபெறுகிறது.
•••••••
சென்னை கோடம்பாக்கம் அக்பராபாத் தெருவில் உள்ள பாலவிநாயகர், பாலமுருகன், மாயமுத்து மாரியம்மன், பால்மூனீஸ்வரர், நவக்கிரஹ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் பிப். 8-ஆம் தேதி காலை நடைபெறுகிறது.
••••••••
அரக்கோணம் அருகேயுள்ள தக்கோலம் பயண்டி அம்மன் தெருவில் உள்ள தாய் மூகாம்பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் பிப். 3-ஆம்தேதி காலை 8.15 மணிக்கு நடைபெறுகிறது.
திருக்கல்யாண உத்ஸவம்
சீர்காழி அருகேயுள்ள ஆச்சாள்புரம் ஸ்ரீயோகாம்பாள் சமேத யோகீஸ்வர சுவாமி கோயிலில் ஸ்ரீபகுளாதேவி சமேத ஸ்ரீகாகபுஜண்டர் மகரிஷி திருக்கல்யாண வைபவம் பிப். 6-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
ஸ்ரீஆத்ம போதேந்திராள் ஜெயந்தி
பண்ருட்டி அருகேயுள்ள வடவாம்பலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகாஞ்சி காமகோடி 58-வது பீடாதிபதி ஸ்ரீஆத்ம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா அவரது அதிஷ்டானத்தில் பிப். 3-இல் நடைபெறுகிறது.
பெருந்திருவிழா
சென்னை கந்தகோட்டம் கந்தசுவாமி கோயிலில் பெருந்திருவிழா முக்கிய நிகழ்வுகள்: பிப். 3- தங்க முலாம் குதிரை வாகனம், பிப். 4- கயிலாய பர்வதாரோகணம், பிப். 9-தெய்வயானை திருக்கல்யாணம், பிப். 11- வள்ளியம்மை திருக்கல்யாணம், பிப். 12- கந்தபொடி உத்ஸவம்.
108 கலச திருமஞ்சனம்
இராஜபாளையம் ஸ்ரீவேட்டை வெங்கடேஸ்வரப் பெருமாள் கோயிலில் 108 கலச திருமஞ்சன வைபவம் பிப். 9-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
தைப்பூசப் பெருவிழா
கலசபாக்கம் அருகேயுள்ள பூண்டி திருத்தலத்தில் 58-ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் தைப்பூசப்பெருவிழா பிப். 5-ஆம் தேதி நடைபெறுகிறது. 
தைப்பூசத் தெப்பத் திருவிழா
சென்னை மயிலை கபாலீசுவரர் கோயில் தைப்பூசப் பெருவிழா முக்கிய நிகழ்வுகள்: பிப். 5- கபாலீசுவரர் தெப்பம், பிப். 6,7 - சிங்காரவேலர் தெப்பம்.
தைப்பூச பெருந்திருவிழா
கும்பகோணம் திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோயில் தைப்பூசப் பெருந்திருவிழா முக்கிய நிகழ்வுகள்: பிப். 3- ரதம், பிப். 5- திருத்தேர், தீர்த்தவாரி, பிப். 12- தெப்ப உத்ஸவம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.