இறைமறை இறங்கிய மொழி!
உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்த உதட்டை அசைப்பதின் ஒலியே மொழி! மொழிகள் மாறுபட்டு இருப்பது அல்லாஹ்வின் சான்று என்று இறைமறை குர்ஆனின் 30 - 22 ஆவது வசனம் கூறுகிறது.


உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்த உதட்டை அசைப்பதின் ஒலியே மொழி! மொழிகள் மாறுபட்டு இருப்பது அல்லாஹ்வின் சான்று என்று இறைமறை குர்ஆனின் 30 - 22 ஆவது வசனம் கூறுகிறது.
ஜம்ஜம் நீரூற்று மக்காவில் உருவானவுடன் அங்கு வந்து குடியேறிய ஜூர்கம் கோத்திரத்தார் பேசிய மொழி அரபி.
அங்கு வளர்ந்த இஸ்மாயில் நபி இந்த கோத்திரத்தாரிடம் அரபி மொழியைக் கற்றார்கள். அரபி எழுத்து இஸ்மாயில் நபி அவர்களால் உருவாக்கப்பட்டது. அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல் - ஹாக்கிம்.
அரபி மொழி சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அரிய மொழி. தெளிவான, விசாலமான, செறிவு மிக்க அங்கீகரிக்கப்பட்ட செம்மொழி அரபிமொழி. அரபியில் இருபத்தி எட்டு எழுத்துக்கள் உள்ளன. அவற்றில் 20 எழுத்துக்கள் புள்ளிகள் உள்ளவை. ஒவ்வொரு எழுத்திற்கும் தனிப்பொருள் உண்டு.
ஐக்கிய நாடுகள் அவையின் ஆறு அலுவலக மொழிகளில் அரபியும் ஒன்று.
18.12.1973 -இல் அரபி மொழி ஐக்கிய நாடுகள் அவையின் அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவை ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 18 -ஆம் நாளை உலக அரபி நாளாக 2010 -இல் அறிவித்தது.
உலகில் அரபி மொழி பேசுவோர் 323 மில்லியன். உலக மொழிகளில் மூன்றாவது இடம். முதலிடம் பெறுவது சீன மொழி. இரண்டாம் இடம் பெறுகிறது ஸ்பெயின் மொழி. அரபியை தாய்மொழியாகக் கொண்டோர் மட்டும் 185 மில்லியன். இக்கணக்கில் அரபி மொழி உலகில் 25- ஆம் இடம் பெறுகிறது.
இறைமறை குர்ஆன் அரபி மொழியில் அருளப்பட்டது. நீங்கள் உணர்ந்துகொள்ள குர்ஆனை அரபி மொழியில் அருளியதாக அருமறை குர்ஆனின் 12-2 ஆவது வசனம் கூறுகிறது. "அரப' என்ற அரபி சொல்லுக்குத் "தெளிவாகப் பேசுதல்' என்று பொருள். இஸ்லாமியர்களின் வணக்க வழிபாட்டு மொழி அரபி.
பனூஸ அது இனத்தவர் அரபி மொழியை இலக்கணச் சுத்தமாய் பேசுவர். அந்த இனத்தைச் சேர்ந்த ஹலீமா அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பால்குடி தாயார்.
அக்காலத்தில் கிரேக்க மொழி நூல்கள் முதன்முதலில் அரபி மொழியில், அரபி அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டன.
முதல் மனிதன் முதல் நபி ஆதம் அவர்கள் பேசிய மொழி அரபி என்பாரும் உண்டு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...