ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குலாலக் கோட்டையூர் குடவரை ஈஸ்வரர்!

புதுக்கோட்டைச் சீமை வடக்கே மாத்தூரையும், கிழக்கில் கறம்பக்குடியையும்; தெற்கில் நேமத்தான்பட்டி வடபுறமுள்ள சவேரியார்புரத்தையும்,' மேற்கில் ஒலிய மங்கலத்தையும் எல்லையாகக் கொண்ட பகுதியாகும். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:36 pm

பொ. ஜெயசந்திரன்


புதுக்கோட்டைச் சீமை வடக்கே மாத்தூரையும், கிழக்கில் கறம்பக்குடியையும்; தெற்கில் நேமத்தான்பட்டி வடபுறமுள்ள சவேரியார்புரத்தையும்,' மேற்கில் ஒலிய மங்கலத்தையும் எல்லையாகக் கொண்ட பகுதியாகும். 

புதுக்கோட்டை சீமை சிறிய பரப்பளவைக் கொண்டவையாக இருந்தாலும் இதன் வரலாற்று பெருமை பல மடங்கு உயர்ந்தது எனலாம். அதாவது, சின்னஞ்சிறிய புதுக்கோட்டை பகுதியில் கி.பி. 7அல்லது 8 - ஆம் நூற்றாண்டளவில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சுமார் 16 குடவரை கோயில்களைப் பார்க்கும்போது புதுக்கோட்டையின் சிறப்பு நன்கு விளங்கும். அதில் ஒரு குடவரைதான் குலாலக் கோட்டையூர் குடவரை! 

குலாலக் கோட்டையூர், புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயத்திற்கு கிழக்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில் ராயவரம் ஊருக்கு மேற்கில் சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோட்டையூர் என்ற வெள்ளாள கோட்டையூர். இந்த கிராமத்திற்கு தென்புறத்திலுள்ள ஒரு சிறிய பாறையின் கிழக்குப் பகுதியில் சுமார் 4 அடி உயரமும், 6 அடி சதுரமும் கொண்ட கருவறையில் இக்குடவரை அமைக்கப்பட்டுள்ளது. 

மற்ற எல்லாக் குடைவரைகளிலும் கருவறையிலுள்ள லிங்கத்தை சுற்றி வரலாம். குலாலக் கோட்டையூர் குடவரையில் அரை வட்ட வடிவில் தாய்ப்பாறையின் பின் சுவருடன் சேர்ந்ததாக ஆவுடையார் உள்ளது. லிங்கம் மட்டும் தாய்ப்பாறையின் பின் சுவருடன் சேராமல் இடைவெளியுடன் அமைந்துள்ளது. இவ்வமைப்பு ஓரு வித்தியாசமான அமைப்பாக காணப்படுகிறது. இவ்இறைவனை குடவரை ஈஸ்வரர் என்று அழைக்கிறார்கள். குலாலக் கோட்டையூர் குடவரை கானா நாட்டுப் பகுதியில் பாண்டிய நாட்டின் எல்லைக்குள் அமைந்துள்ளது. 

தற்காலத்தில் இக்குடவரையின் வாசற்படிக்கு மரக்கதவு போடப்பட்டுள்ளதோடு கோயிலின் கருங்கல்லில் நந்தியும், பலிபீடமும் செய்து வைக்கபட்டுள்ளன. குடவரையின் வடக்கில் சிறிய ஆஸ்பெட்டால் கொட்டகை அமைத்து அதில் ஓர் அம்பாள் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த அம்பாளை ஸ்ரீமங்களாம்பிகை என்று அழைக்கிறார்கள். இக்கோயிலில் சித்திரா பெளர்ணமி, மாதப் பெளர்ணமி, பிரதோஷம் போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன. பக்தர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஈசன் மற்றும் அம்பாளின் பேரருளைப் பெறுகின்றனர். 

தொடர்புக்கு: 84898 85410. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.