நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பொருநை போற்​று​தும்! - 108

​​ந​ம்​மாழ்​வார் புளி​யம்​பொந்​தில் பொலிந்​தி​ருக்க, மது​ர​க​வி​யார் வந்​துத் தூண்​ட​லிட, திரு​வி​ருத்​தம் 100, திரு ஆசி​ரி​யம் 7, பெரிய திரு​வந்​தாதி  87, திரு​வாய்​மொழி 1102 என்று பாசு​ரங்​க​ளைப் பொ

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:11 pm

டாக்டா் சுதா சேஷய்யன்


​ந​ம்​மாழ்​வார் புளி​யம்​பொந்​தில் பொலிந்​தி​ருக்க, மது​ர​க​வி​யார் வந்​துத் தூண்​ட​லிட, திரு​வி​ருத்​தம் 100, திரு ஆசி​ரி​யம் 7, பெரிய திரு​வந்​தாதி  87, திரு​வாய்​மொழி 1102 என்று பாசு​ரங்​க​ளைப் பொழிந்​தார் நம்​மாழ்​வார்.  அவற்றை மது​ர​க​வி​யார் ஏட்டில் பதி​வித்​தார். இரு​பெ​ரும் மஹான்​க​ளின் திரு​மே​னி​கள் தீண்​டிய தலம் இது. 

சில காலம் கழிந்த பின்​னர்,  பாசு​ரங்​க​ளின் புழக்​கம் குன்​றிப் போக, எப்​ப​டியோ ஒரு சில வரி​கள் நாத​மு​னி​க​ளின் செவிக்​குச் சென்​றன. தேடிக் கண்​டு​பி​டித்​து​வி​ட​வேண்​டும் என்று புறப்​பட்ட அவர், தேடித் தேடி இப்​ப​கு​தியை அடைந்​தார். மது​ர​க​வி​யா​ரின் வம்​சத்​தா​ரி​டம், "கண்ணி நுண் சிறுத் தாம்பு' என்​னும் மது​ர​க​வி​யார் பாசு​ரத் தொகுப்​பைப் பெற்​றார். பன்​னீ​ரா​யி​ரம் முறை அதனை உருச் செய்​தால், நாலா​யி​ர​மும் கிட்டும் என்று அவர்​கள் கூற, அதன்​ப​டியே செய்​தார். அப்​போது, நம்​மாழ்​வாரே நாத​மு​னி​க​ளுக்​குப் பிரத்​ய​க்ஷ​மாகி,  திரை மறை​வில் அமர்ந்து நான்​கா​யி​ரத்​தை​யும் உப​தே​சித்​த​தாக வர​லாறு. நாத​மு​னி​க​ளின் இம்​மு​யற்​சியே, தமி​ழன்​னைக்கு அணி​க​ல​னாக அமைந்​தது. 

இத்​த​லமே பர​ம​ப​தத்​தின் எல்லை என்​ப​தற்​கொரு சம்​ப​வம் சான்​றா​கச் சொல்​லப்​ப​டு​கி​றது. இத்​த​லத்​திற்கு எதிரே, பொரு​நை​யின் வட​க​ரை​யில், சித்​தர் ஒரு​வர் வாழ்ந்​தார். அவ​ரி​டம் நாய் ஒன்​றி​ருந்​தது. அது அவ்​வப்​போது, ஆற்​றைக் கடந்து வந்து, குரு​கூர் வீதி​க​ளில் திரி​யும். உண​வ​ருந்​தி​விட்டு மக்​கள் வீசும் இலை​க​ளில் மீத​மி​ருக்​கும் உணவை உண்​ணும். ஒரு​நாள் இவ்​வாறு உணவு உண்​டு​விட்​டுத் திரும்​பு​கை​யில், ஆற்​றுச் சுழ​லில் சிக்​கிக் கொண்​டது. உட​லி​லி​ருந்து உயிர் பிரிய, நாயின் ஆன்​மா​வா​னது, பேரொ​ளிப் பிர​கா​ச​மாக விண்​ணில் எழுந்​தது. இதனை வட​க​ரை​யில் அமர்ந்​தி​ருந்த சித்​தர் கண்​டார். குரு​கூர் எச்​சிலை உண்​ட​தால் நாய்க்​குக் கிட்டிய வீடு​பேறு தனக்​குக் கிட்ட​வில்​லையே என்று வருந்​தி​னா​ராம். 

வாய்க்​கும் குரு​கைத் திரு​வீதி எச்​சிலை வாரி​யுண்ட
நாய்க்​கும் பர​ம​ப​த​ம​ளித்​தாய் அந்த நாயோ​டிந்​தப்
பேய்க்​கும் இட​ம​ளித்​தால் பழுதோ பெரு​மாள் மகு​டம்
சாய்க்​கும் படிக்​குக் கவி சொல்லு ஞானத்​த​மிழ்க் கடலே  
என்று அச்​சித்​தர் பாடி​னா​ராம். 

அரை​யர் சேவை​யும், பொரு​நை​யா​ளின் நீரெ​டுத்​துக் காய்ச்​சிக் கிடைக்​கப்​பெற்ற நம்​மாழ்​வார் திரு​மே​னி​யும் ஆழ்​வார் திரு​ந​க​ரி​யின் சிறப்​பு​கள். 

​பொ​​ரு​நை​யா​ளோடு பய​ணித்​துக் கொண்டே குரங்​கணி என்​னும் சிற்​றூரை அடை​கி​றோம். தென்​தி​ருப்​பே​ரைக்கு வெகு அரு​கி​லும் ஆழ்​வார் திரு​ந​க​ரிக்​குச் சுமார் 6 கி.மீ. தொலை​வி​லும் இருக்​கி​றது குரங்​கணி. பொரு​நை​யா​ளின் தென்​கரை கிரா​ம​மான இது நம்​மைக் கவர்​வ​தற்​குக் கார​ணமே இதன் பெயர் என்று சொல்​ல​லாம். அதென்ன குரங்​கணி? 

ராமா​ய​ணக் காலத்​தோடு இவ்​வூ​ருக்​குத் தொடர்​பி​ருப்​ப​தாக உள்​ளூர்க் கதை தெரி​விக்​கி​றது. ராவ​ணன் சீதை​யைத் தூக்​கிச் சென்​றா​னில்​லையா? அப்​போது, தன் மீதி​ருந்த நகை​கள் சில​வற்றை அவள் தூக்கி வீசி​னா​ளில்​லையா? அவ்​வாறு வீசி​ய​தில் "முத்து மாலை' ஒன்று இங்கு விழுந்​த​தாம். 

சீதை எங்​கி​ருக்​கி​றாள் என்று அனு​ம​னும் மற்​ற​வர்​க​ளும் தேடிப்​போ​ன​போது, முத்து மாலை கண்​ணில்​பட, சீதை​யின் மாலை​யாக இருக்​க​லாம் என்​றெண்ணி, இவ்​வ​ழி​யா​கத்​தான் எங்கோ போயி​ருக்​க​வேண்​டும் என்று அறிந்​து​கொண்டு தேடி​னார்​க​ளாம். 

பின்​னர், ராவ​ண​னோடு போர் தொடுத்​த​போது, வான​ரச் சேனையை வழி நடத்தி வந்த ராமர், இங்​குத்​தான் குரங்​கு​களை அணி அணி​யாக நிற்க வைத்​தா​ராம். ஆக​வே​தான், இந்த இடத்​திற்​குக் "குரங்​கணி' என்​னும் பெயர் வந்​தது. 

இந்த கிரா​மத்​தில் அருள்​மிகு "முத்​து​மா​லை​யம்​மன்' திருக்​கோ​யில் உள்​ளது. சரி​யா​கத்​தான் ஊகித்​து​விட்​டீர்​கள்........! சீதையை இவ்​வாறு வணங்​கு​கி​றார்​கள். 

சீதை​யின் முத்​து​மாலை விழுந்த இட​மல்​லவா? பிற்​கா​லத்​தில், பக்​தர் ஒரு​வர் இந்​தப் பக்​கம் வந்​த​போது, முத்து மாலை​யின் ஒளி அவ​ரு​டைய கண்​க​ளைக் கூசச் செய்​தது. பிற​ருக்கு அம்​முத்து மாலை புலப்​ப​ட​வில்​லை​யா​யி​னும், அரு​கி​லி​ருந்த மண் சட்டியை எடுத்​துப்​போட்டு அதனை மூடி​னார். அந்த முத்து மாலை​யைச் சீதை​யா​கவே நம்​பி​னார். ஊர்​மக்​க​ளும் கூடி, மண் திரு​மே​னி​யையே சீதை​யாக பாவித்​துக் கோயில் எழுப்பி வழி​பட்​ட​னர். முத்​து​மா​லை​யா​கச் சீதை இங்கு எழுந்​த​ரு​ளி​னாள் என்​ப​தைக் குறிப்​பி​டும் வகை​யில், "முத்​து​மா​லை​யம்​மன்' என்றே வழங்​கி​னர். 

பல​கா​லத்​திற்​கும் இக்​கோ​யி​லில் மண் திரு​மே​னியே வழி​ப​டப்​பட்​டது. திரு​மே​னிக்​குப் பூஜை நடக்​கும். ஆனால், அபி​ஷே​க​மும், நைவேத்​தி​ய​மும் கிடை​யாது. மண் திரு​மேனி என்​ப​தா​லும், அசோ​க​வ​னச் சீதை உண்​ணா​மல் இருந்​தாள் என்​ப​தா​லும் இவ்​வ​ழக்​கம். 

20-ஆம் நூற்​றாண்​டின் இடைப்​ப​கு​தி​யில்​தான், மண் திரு​மேனி அகற்​றப்​பட்டு, கல் திரு​மேனி அமைக்​கப்​பட்​டது. 

​சி​ல நூற்​றாண்​டு​க​ளுக்கு முன்​னர், கோயி​லின் சுற்​றுச்​சு​வ​ரைச் சீர​மைக்​கச் சில முயற்​சி​கள் நடந்​தன. அதி​காரி ஒரு​வர், சுற்​றுச்​சு​வரை இடிப்​ப​தற்கு முனைந்​தார். பிற​ரெல்​லாம் தடுத்​த​னர். தான் கூப்​பி​டும் குர​லுக்கு அம்​மனே எதிர்க்​கு​ரல் கொடுத்​தால், தன் செயலை நிறுத்​திக்​கொள்​வ​தா​க​வும் கூறி​னார். கட்டா​யம் அம்​மன் குரல் கொடுப்​பாள் என்று ஊர்​மக்​கள் நம்​பிக்கை தெரி​விக்க, அவ​ரும் அம்​மன் பெய​ரைச் சொல்லி அழைக்க, "என்​ன?'​என்று எதிர்​வினா கேட்டாள் முத்​து​மா​லை​யம்​மன். அந்த அதி​கா​ரி​யும் அம்​ம​னு​டைய அருளை உணர்ந்து, தன்​னு​டைய முயற்​சி​யைக் கைவிட்​டார். 

அருள்​மிகு முத்​து​மா​லை​யம்​ம​னு​டைய காவல் தெய்​வம் பெரி​ய​சாமி. இவர் இங்கு வந்​த​தற்​கும் ஒரு வர​லாறு உண்டு. பொரு​நை​யின் வெள்​ளப்​பெ​ருக்​கில் சிலை​யாக இவர் வர, அம்​ம​னு​டைய அரு​ளால், சிலையை இங்​கேயே காவல் தெய்​வ​மா​கப் பிர​திஷ்டை செய்​த​னர். 

​பொ​ரு​நை​யின்​ ​போக்​கோடு இன்​னும் சிறு தொலைவு செல்​வோமா? 

பொரு​நை​யின் வட​க​ரை​யில் இருக்​கும் ஏரல் என்​னும் ஊரை​அ​டைந்து விடு​கி​றோம். வணிக நக​ர​மாக இருக்​கும் ஏரல், சேர்​மன் அரு​ணா​சல சுவா​மி​க​ளின் திருத்​த​ல​மும் ஆகும். 

"சேர்​மன் சுவா​மி​கள்' என்றே வணங்​கப்​ப​டு​கி​ற​ அ​ரு​ணா​சல சுவா​மி​க​ளின் வர​லாறு வெகு சுவா​ர​சி​ய​மா​ன​தா​கும்.

 (தொட​ரும்)  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.