பிகாரில் விற்பனையாளர் ஒருவர் நாற்காலியிடையே மறைத்துவைத்து மது கடத்திச் சென்ற சம்பவம் காவலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
நாற்காலியின் அமரும் பாகத்தை வெட்டி எடுத்து, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிவைத்து அதன் நடுவில் மது பாட்டில்களைக் கடத்திச் சென்றுள்ளார்.
பிகாரில் மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சட்டவிரோதமாக கடத்திச்சென்று மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் நாற்காலிகளை அடுக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றவரை சோதனை செய்ததில், அவர் மதுபாட்டில்களை கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.
இதன் பிறகு நாற்காலிகளை ஒன்றொன்றாக எடுத்துப் பார்க்கையில், அதனுள் ஏராளமான மதுபாட்டில்கள் கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

காரைக்குடியில் பேசாமல் சென்றது ஏன்? விஜய்க்கு ப. சிதம்பரம் கேள்வி

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியைக் கடத்தியவருக்கு போக்சோ வழக்கில் 30 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


