/

இந்துமத அற்புதங்கள் - 44: ஒரு மருத்துவ அற்புதம்

1990-ஆம் ஆண்டு. சென்னையில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பத்து நாள்கள் முகாமிட்டிருந்தார்கள்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:31 pm

டாக்டா் சுதா சேஷய்யன்

1990-ஆம் ஆண்டு. சென்னையில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பத்து நாள்கள் முகாமிட்டிருந்தார்கள். சென்னை முகாமில் எப்போதும் உடனிருந்து செயல்படுபவர் சந்திரசேகர மேத்தா. மேத்தாவின் இல்லத்தில் ஓர் அற்புதம்; அருள்.

1972-ஆம் ஆண்டு மே மாதம் 6-ஆம் தேதி. ஊட்டியில் இருந்தார் மேத்தா. திடீரென்று சென்னையிலிருந்து தொலைபேசி அழைப்பு. ஏ.ங. மருத்துவமனையிலிருந்து ஈழ்.ட.இ. ரெட்டி பேசினார். ""உங்கள் தந்தை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிர் பிழைப்பது கடினம்.''

செய்வதறியாத மேத்தா அப்போது மதுரையில் முகாமிட்டிருந்த ஸ்ரீ பெரியவர்களிடம் ஓடினார். கதறினார்.

""கவலைப்படாதே'' என்று சொல்லி பிரசாதம் கொடுத்தார்கள் ஸ்ரீ பெரியவர்கள். ""இந்த பிரசாதம் எப்படியாவது காலையில் உங்கள் தந்தைக்கு இட்டுவிட வேண்டும். நீ பாட்டுக்கு ஊட்டிக்குப் போகலாம்'' என்றும் சொல்லி விட்டார்கள்.

ஸ்ரீ பெரியவர்கள் மீது வைத்த ஆணித்தரமான பக்தியுடன் மதுரை ரயில் நிலையம் சென்றார் மேத்தா. அன்றிரவு சென்னைக்குப் புறப்படும் ரயிலின் ஓட்டுநரைத் தேடிப் பிடித்தார். அவரிடம் வேண்டிக்கொண்டு பிரசாதத்தைக் கொடுத்தார்.

சென்னைக்குத் தொலைபேசியில் தெரிவித்து "இந்த ரயிலுக்கு வந்து பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளச் சொல்லலாம்' என்பது மேத்தாவின் திட்டம்.

ரயில் டிரைவர் ஒத்துக்கொண்டவுடன் சென்னைக்கு "லைட்னிங் கால்' போட்டார். விஷயத்தைச் சொன்னார். வீட்டுக்காரர்களுக்குக் கோபம். ""மகன் நீ. தந்தைக்கு ஒன்று கிடக்க ஒன்றாகிவிட்டால்... வர வேண்டாமா?'' ""என் குருநாதர் என்னை ஊட்டிக்குப் போகச் சொல்லிவிட்டார். அவர் சொல்வதைக் கேட்பது என் கடமை'' - இது மேத்தா.

ரயில் டிரைவரிடம் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு சென்னைக்கும் ரயில் நெம்பர் எல்லாம் தெரிவித்துவிட்டு ஊட்டிக்கும் சென்றுவிட்டார் மேத்தா. மறுநாள் காலை. 9.30 மணியளிவில் ஊட்டிக்குத் தொலைபேசி அழைப்பு. அதே ஈழ். ட.இ. ரெட்டி ""மேத்தா ஏதோ மெடிக்கல் மிரக்கிள் (Medical Miracle) நடந்துவிட்டது. உங்கள் அப்பாவுக்கு நோய் வந்ததும் தெரியவில்லை.

போனதும் தெரியவில்லை''.

மருத்துவ அற்புதமா? - குருவின் மகத்துவ அற்புதமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.