இந்துமத அற்புதங்கள் 52: ஒழிந்து போன ஊர் நோய்
திருஞானசம்பந்தப் பெருமான் கொங்கு நாட்டின் திருச்செங்கோடு என்னும் திருத்தலம் அணுகினார்.


திருஞானசம்பந்தப் பெருமான் கொங்கு நாட்டின் திருச்செங்கோடு என்னும் திருத்தலம் அணுகினார்.
கொடிமாடச் செங்குன்றூர் என்று வழங்கப் பெறும் இவ்வூருக்குப் பெருமான் வருகை புரிந்தபோது பனிக்காலமாக இருந்தது. பனி மிகுதியாக ஆக குளிர் சுரம் மிகுந்தது. ஊரில் பலரையும் சுரம் தாக்க, ஞானசம்பந்தரோடு வந்த அடியார்களும் அதற்கு ஆட்பட்டனர்.
வெகு வேகமாய்ப் பரவிய நோயால் மக்கள் வருந்துவதையும் ஊர் தவிப்பதையும் கண்ட பெருமானார் மாதிருக்கும் பாதியனாம் அர்த்தநாரீஸ்வரப் பெருமானை அன்புடன் பாடி வணங்கினார். ""திருநீலகண்டரே! நோய் எம்மைத் தீண்டாதிருக்க'' என்று வேண்டிப் பாடியவுடன், ஊர் மக்களைப் பிடித்திருந்த நோய் அகன்றது.
காற்றினும் கடிது பரவிய கொடுநோய் கட்டுப்பட்டுக் காணாமல் போக, ஊர் கூடி நின்று அம்மையப்பனை வணங்கியது.
நோய் தீர ஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகம்
"அவ்வினைக்கு இவ்வினை யாம்என்று
சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும்
உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்துஎம் பிரான்கழல்
போற்றுது நாம்அடியோம்
செய்வினை வந்துஎமைத் தீண்டப்
பெறாதிரு நீலகண்டம்.''
கொடிமாடச் செங்குன்றூர் தலத்தினைச் சென்றடையும் வழி:
சேலம், ஈரோடு, நாமக்கல் முதலிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். (ஈரோட்டிலிருந்து 18 கி.மீ; நாமக்கல்லிலிருந்து 32 கி.மீ.) தற்போது திருச்செங்கோடு என்று வழங்கப்படுகின்றது.
இறைவன் - அர்த்தநாரீஸ்வரர்
இறைவி - பாகம்பிரியாள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...