இந்துமத அற்புதங்கள் 52 - சிவிகை தந்த சிவனருள்
திருமுதுகுன்றம், திருப்பெண்ணாகடம் ஆகிய தலங்களைப் பணிந்து திருநெல்வாயில்


திருமுதுகுன்றம், திருப்பெண்ணாகடம் ஆகிய தலங்களைப் பணிந்து திருநெல்வாயில் அரத்துறை என்னும் தலத்தை அடைந்தார் திருஞானசம்பந்தர். சிறுபிள்ளையல்லவா! மெல்ல மெல்ல நடந்தார். இருப்பினும் கால்கள் நோக, திருத்தலத்தை அடையுமுன்னரே ஊர் அருகாமையில் இருந்த ஒரு மண்டபத்தில் அமர்ந்தார்.
இரவு மண்டபத்தில் தங்கியிருந்தார். நெல்வாயில் அரத்துறை ஊர்ப் பெரு மக்கள் கனவில் இரவு புகுந்த இறைவன், சீர்காழிச் சிறுபிள்ளை ஞானசம்பந்தர் அமர்ந்து பயணிக்க முத்துச் சிவிகையும் அவருக்கு நிழல் தர முத்துக் குடையும் அளித்து அவரை ஊருக்குள் அழைத்து வருமாறு பணித்தார். காலையில் எழுந்த ஊர்ப் பெருமக்கள் வியந்தார்கள்; விழித்தார்கள்.
திருக்கோயிலுக்குள் அவர்கள் சென்றபோது முத்துச்சிவிகையும் முத்துக் குடையும் இறையருளால் அங்கிருப்பதைக் கண்டார்கள். கூடவே ஞானசம்பந்தர் வருகையை முன்னூத முத்துச் சின்னங்களும் இருந்தன.
அவற்றை எடுத்துக்கொண்டு சம்பந்தப் பெருமானை எதிர்கொண்டழைத்து வந்தனர்.
திருநெல்வாயில் அரத்துறையில்
திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்
""எந்தை ஈசன்எம் பெருமான்
ஏறமர் கடவுள்என்று ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால்
சென்றுகை கூடுவது அன்றால்
கந்த மாமலர் உந்திக்
கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே.''
திருநெல்வாயில் அரத்துறை
தலத்தினைச் சென்றடையும் வழி:
தொழுதூர் - விருத்தாசலம் பேருந்து சாலையில் தொழுதூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலையில் "கொடிகளம்' என்னும் இடத்திலிருந்து பிரிந்து செல்லும் மண் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் இத் தலத்தை அடையலாம். காரில் செல்வோர் கோயில்வரை செல்லலாம்.
இறைவன் - அனந்தீஸ்வரர், தீர்த்தபுரீஸ்வரர்,
அரத்துறைநாதர், இறைவி - ஆனந்தநாயகி,
திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...