இந்துமத அற்புதங்கள் 52: பாதை சொன்ன பேரருள்
திருப்புறம்பியம் என்னும் திருத்தலத்தில் வழிபட்டுப் பின் அங்கிருந்து வேறு பல திருத்தலங்களுக்குச் சென்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.


திருப்புறம்பியம் என்னும் திருத்தலத்தில் வழிபட்டுப் பின் அங்கிருந்து வேறு பல திருத்தலங்களுக்குச் சென்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அவ்வாறு செல்லும்போது சரியான பாதை புரியாமல் ஊர் மாற்றிச் சென்றார்.
சுந்தரரின் வழியில் வந்து நின்றார் ஒரு வேதியர்.
அவரிடம் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்துக்கு வழி கேட்டார் சுந்தரர். வேதியரோ, "விருத்தாசலம் செல்லும்முன், கூடலையாற்றூர் செல்லுங்கள்' என்று வழி காட்டினார். மேலும், கூடவே வந்து துணை செய்தார்.
பக்தனே வழி தப்பினால்கூட, பகவான் விட்டுவிடுவாரா என்ன? எப்போதும் நல்வழி காட்டும் நாயகனின் அற்புதங்கள் என்னே!
வழிகாட்டி மறைந்த திருவருள் நினைந்து கூடலையாற்றூரில் சுந்தரர் பாடிய பதிகம்
"வடிவுடை மழுவேந்தி மதகரியுரி போர்த்து
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்
கொடிமணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்
அடிகள்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.''
திருக்கூடலையாற்றூர்
தலத்தினைச் சென்றடையும் வழி:
சேத்தியாதோப்பு - கும்பகோணம் பாதையில் "குமாரகுடி' வந்து, ஸ்ரீமுஷ்ணம் போகும் பாதையில் பிரிந்து 2 கி.மீ. சென்று "காவாலகுடி' சாலையில் திரும்பி, 2 கி.மீ. சென்று "காவாலகுடி'யை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம். கோயில்வரை பேருந்து செல்லும்.
இறைவன் : நர்த்தனவல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாதர்
இறைவி : பராசக்தி, ஞானசக்தி (இரு அம்பாள் சந்நிதிகள்) (புரிகுழல் நாயகி)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...