/

இந்துமத அற்புதங்கள் 52: பாலை நீங்கிய பாங்கு

உமையம்மையின் ஞானப்பால் குடித்துத் திருவருள் பெற்றார் திருஞானசம்பந்தர். சீர்காழிப் பதியில் சிவனருள் செல்வராய் ஞானசம்பந்தர் எழுந்தருளிய செய்தி கேட்டுப் பலர் அவரைக் காண விழைந்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:26 am

டாக்டா் சுதா சேஷய்யன்

உமையம்மையின் ஞானப்பால் குடித்துத் திருவருள் பெற்றார் திருஞானசம்பந்தர். சீர்காழிப் பதியில் சிவனருள் செல்வராய் ஞானசம்பந்தர் எழுந்தருளிய செய்தி கேட்டுப் பலர் அவரைக் காண விழைந்தனர்.

திருநனிபள்ளி என்னும் சிறு ஊரிலிருந்தும் பலர் வந்தனர். தங்களின் ஊருக்கு வரவேண்டும் என்று சம்பந்தப் பெருமானை அழைத்தனர்.

தன் தந்தையாருடன் புறப்பட்டார் சம்பந்தர். வழியில் வரும்போது கண் முன்னால் தோன்றிய வறண்ட நிலப்பரப்பைக் கண்டார். வெடித்துக் கிடந்த நிலம். "இது என்ன ஊர்?' என்று வினவினார் சம்பந்தர்.

"இதுதானப்பா நனிபள்ளி!'' என்று தந்தை பதில் சொன்னவுடன் பதறிப் போனார் திருஞானசம்பந்தர். இதுவா நனிபள்ளி? இந்த வறண்ட பூமியா?

"இறைவா! இந்த ஊரை வளப்படுத்து' என்று வேண்டிப் பதிகம் பாடினார். பதிகமே பாலையாக இருந்த நனிபள்ளியை நெய்தல் நிலமாக்கியது.

பாலையின் வறட்சி நீங்கக் கேட்டுத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்:

"காரைகள் கூகை முல்லை களவாகையீகை

படர்தொடரிகள்ளி கவினிச்

சூரைகள் பம்மி விம்மு சுடுகாடமர்ந்த

சிவன்மேய சோலை நகர்தான்

தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை

குதிகொள்ள வள்ளை துவள

நாரைக ளாரல்வாரி வயன்மேதிவைகு

நனிபள்ளி போலு நமர்காள்.''

திருநனிபள்ளி தலத்தினைச் சென்றடையும் வழி:

மயிலாடுதுறையிலிருந்து செல்லலாம். அடிக்கடி பேருந்து செல்கிறது. செம்பொனார் கோயிலுக்கு அருகில் உள்ளது.

இறைவன் - நற்றுணையப்பர், இறைவி - பர்வதபுத்திரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.