அரிய நீதி
அரசனின் நிதி, ஆள்வோருக்கு உரியதன்று. ஆளப்படும் மக்களுடையது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்ச்சி இது.


அரசனின் நிதி, ஆள்வோருக்கு உரியதன்று. ஆளப்படும் மக்களுடையது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்ச்சி இது.
தாவூது நபி பனூ இஸ்ரவேலர்களின் அரசர். அவர்கள் மாறுவேடம் பூண்டு மக்களை சந்தித்து அரசரைப் பற்றி மக்களிடம் விசாரித்து மக்கள் கூறும் குறைகளைக் களைந்து நிறைவாய் ஆட்சி செய்தார்கள்.
ஒருநாள் மனித உருவில் உலாவிய மலக்கு (வானவர்) ஒருவரை சந்தித்த தாவூது நபி வழக்கம் போல் அரசரைப் பற்றி அபிப்ராயம் கேட்டார்கள்.
"நற்குணமுடைய அரசரிடம் அரசுப் பணத்தில் வாழும் அற்ப குணம் உள்ளது. அதனை மாற்றிக் கொண்டால் மன்னர் மாட்சியுடைவர்'' என்று அந்த வானவர் சாட்சி சொன்னார்.
இதையடுத்து தாவூது நபி தொழில் ஒன்றைக் கற்றிட அருளுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள். உள்ளம் உருகிய வேண்டுதலை ஏற்ற இறைவன் உருக்குச் சட்டை உருவாக்கி பொருளைப் பெருக்கி வாழும் பெருந்தொழிலை தாவூது நபிக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
இந்நிகழ்ச்சியை இறைமறை குர்ஆனின் 34-11வது வசனம்,
"பெரிய அங்கிகள் செய்வீராக. இன்னும் துவாரத்தில் அளவாக்கி வைப்பீராக. இன்னும் நற்செயல்களைச் செய்வீராக. நான் நீங்கள் செய்வதைப் பார்க்கிறேன்'' என்று அல்லாஹ் தாவூது நபிக்கு நவின்றதைக் கூறுகிறது.
உருக்குச் சட்டை தயாரித்த தாவூது நபி ஒரு நாளைக்கு ஒரு சட்டையை நான்காயிரம் திர்ஹத்திற்கு விற்று இரண்டாயிரம் திர்ஹத்தை குடும்பத்திற்கு செலவிட்டு இரண்டாயிரம் திர்ஹத்தை தானம் செய்வார்கள். குர்ஆன் வசனத்தில் வர்ணித்தபடி உருக்குச் சட்டையின் வளையங்கள் ஒரே அளவாக இருந்தன.
தாவூது நபி இறந்தபொழுது அவர்களிடம் ஆயிரம் உருக்குச் சட்டைகள் இருந்தன என்று லுபாபு என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.
அரசுப் பணத்தை ஆடம்பரமாக அனாவசியமாய் செலவிடும் ஆட்சியாளர்கள் அறிய வேண்டிய அரிய நீதி இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...