ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நவராத்திரியில் என்ன செய்யலாம்? எதைப் படிக்கலாம்?

ஒவ்வொரு பருவ ஆரம்பத்திலும் நவராத்திரி உண்டு. அவ்வாறு உள்ள நவராத்திரிகள் ஆறு.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:04 pm

தங்க.சங்கரபாண்டியன்

ஒவ்வொரு பருவ ஆரம்பத்திலும் நவராத்திரி உண்டு. அவ்வாறு உள்ள நவராத்திரிகள் ஆறு. இந்த ஆறு நவராத்திரிகளுள் வசந்த நவராத்திரியும், சாரதா நவராத்திரியும் மிகவும் சிறப்பானவை. குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்தி (9 நாள்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. உலகம் உய்யும் பொருட்டு, இந்த ஒன்பது நாளும் அன்னை ஸ்ரீகாமாட்சி ஊசி முனையில் தவம் செய்த நாள்களாகும். அந்த ஒன்பது நாளும் பெண்கள் எதையெதைச் செய்ய வேண்டும்; எதையெதை செய்யக்கூடாது என்பதை முன்னோர் வகுத்து வைத்துள்ளனர்.

ஒவ்வொரு பருவ ஆரம்பத்திலும் நவராத்திரி உண்டு. அவ்வாறு உள்ள நவராத்திரிகள் ஆறு.

* இல்லத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

* வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும், அரிசிமாவால் கோலம் போட்டு, அதில் மஞ்சள் இடுவது மிகவும் விசேஷமானது.

* அசைவ உணவை அறவே தவிர்க்க வேண்டும். முடிந்தால் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது சாலச் சிறந்தது.

* கணவன் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாமல் இருக்க வேண்டும். இனிமையான சொற்களையே பேசவேண்டும்.

* குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* கன்னிப் பெண்களை அன்னை பராசக்தியாக எண்ணி அன்போடு உபசரிக்க வேண்டும். முடிந்தால் இந்த ஒன்பது நாளும் அவர்களுக்குப் பூ அணிவிப்பது நல்லது.

* இல்லத்திற்கு வரும் கன்னிப் பெண்கள், சிறுமிகள், சுமங்கலிகளுக்குத் தவறாமல் மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தந்து இன்முகத்துடன் உபசரிக்க வேண்டும். முடிந்தால் பாதபூஜை செய்து நலங்கிடுவது சிறந்தது.

* பூஜை அறையில் நாள் முழுவதும் பராசக்தியைப் போற்றும் ஏதாவது பாடலோ, ஸ்தோத்திரமோ ஒலித்துக்கொண்டிருப்பது நல்லது. இவ்வாறு இருக்கும் இடம்தான் அம்பிகை விரும்பி வந்து குடியேறும் இடம்.

* ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், ஆதிசங்கரர் அருளிய சௌந்தர்யலஹரி, காளிதாஸர் இயற்றிய சியாமளா தண்டகம், கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதி, குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலை, அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி மற்றும் தேவி பாகவதம், தேவி மாகாத்மியம், நாராயணீயம், தேவியின் லீலைகளைக் கூறும் புராணக் கதைகள் போன்றவற்றையும் படிக்கலாம். இவ்வாறு படிக்கும் இடத்தில் அன்னையின் அருட்கடாட்சம் பொங்கிப் பொலியும்.

கூடுமானவரை, இந்த ஒன்பது நாளும் வீட்டில் இருக்கும் அனைவரும் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு, மேற்குறிப்பிட்ட நூல்களைப் பாராயணம் செய்தால், குடும்பம் செல்வச் செழிப்போடு திகழும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.