நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நடுநிலையான தீர்ப்புகள்

தீர்ப்பு திருத்தப்படலாம். திருத்தம் பொருத்தமானதாக இருக்க வேண்டும். தீர்ப்பு மாற்றப்படலாம். மாற்றம் ஏற்புடையதாக இருக்க வேண்டும். வாதி, பிரதி வாதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:04 pm

மு. அ. அபுல் அமீன்

தீர்ப்பு திருத்தப்படலாம். திருத்தம் பொருத்தமானதாக இருக்க வேண்டும். தீர்ப்பு மாற்றப்படலாம். மாற்றம் ஏற்புடையதாக இருக்க வேண்டும். வாதி, பிரதி வாதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இறைமறை திருக்குர்ஆனின் 21-78 வது வசனத்தில் ஒருவரின் விளைந்த நிலத்தில் வேறொருவரின் ஆடுகள் மேய்ந்து நாசம் செய்த விவகாரத்தில் தாவூது நபியும் சுலைமான் நபியும் தீர்ப்பு வழங்கியபொழுது அல்லாஹ் அவர்களின் தீர்ப்பைப் பார்த்துக் கொண்டிருந்ததாக அறிவிக்கிறான்.

தாவூது நபியிடம் இருவர் வந்தனர். ஒருவரின் நிலத்தில் மற்றொருவரின் ஆடுகள் இரவில் மேய்ந்து பயிர்களை அழித்து விட்டதாக வழக்குரைத்தனர். தாவூது நபி வழக்கை விசாரித்து, அழிந்த பயிர்களின் இழப்பும் பயிர்களை அழித்த ஆடுகளின் விலையும் சமமாக இருந்ததால் நிலத்திற்குரியவர் இழப்பிற்கு ஈடாக ஆடுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு தீர்ப்பு அளித்தார்கள்.

தீர்ப்பைப் பெற்றுத் திரும்பிய இருவரும் வழியில் தாவூது நபியின் மகன் சுலைமான் நபியை சந்தித்தனர். அந்த சந்திப்பில் பரஸ்பரம் சலாம் கூறி நலம் விசாரித்த பின் அவர்களின் வழக்கையும் தாவூது நபி அவர்கள் வழங்கிய தீர்ப்பையும் சுலைமான் நபி அவர்களிடம் கூறினர். அப்பொழுது சுலைமான் நபி அவர்களுக்கு சுமார் 13 வயது. தந்தை தாவூது நபி அவர்களின் தீர்ப்பினும் தெளிவான எளிய தீர்ப்பு இருப்பதாக சுலைமான் நபி அவர்கள் அறிவித்தார்கள். இச்செய்தியை அறிந்த தாவூது நபி மகனை அழைத்து தக்க தீர்ப்பு என்ன வென்று வினவினார்கள்.

"ஆடுகள் பயிரை அழித்துவிட்டதாக வழக்கு. ஆடுகளுக்கு சொந்தக்காரன் அந்நிலத்தில் விவசாயம் செய்து கதிர் அறுத்து விளைச்சலை நிலத்துக்கு உரியவரிடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு விளைச்சலை ஆடுகளுக்கு உரியவன் கொடுக்கும் வரை ஆடுகளை விவசாயி வளர்த்து ஆடுகளின் பாலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆடுகள் ஈனும் குட்டிகளையும் திரும்ப ஒப்படைக்கும் வரையில் நிலத்துக்குரியவன் வளர்த்து பயனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்''இத்தீர்ப்பை இருவரும் திருப்தியுடன் ஏற்றனர்.

இந்தத் தீர்ப்பால் வழக்குரைத்த இருவருக்கும் பாதிப்பில்லாமல் இழப்பீடு செய்யப்பட்டது. அழிந்த பயிரின் விளைச்சலை நிலத்துக்குச் சொந்தக்காரன் பெறுகிறான். ஆட்டுக்குச் சொந்தக்காரனும் ஆடுகளை இழந்துவிடாமல் மீண்டும் பெறுகிறான்.

இந்தத் தீர்ப்பில் பயிரை இழந்த நிலக்காரனுக்கு இரட்டைப் பலன் கிடைப்பதுபோல் தோன்றும். அது இடைக்காலப் பயனே. முந்தைய தீர்ப்பில் ஆடுகளை அடையும் நிலக்காரன் இத்தீர்ப்பில் ஆடுகளை அடைய முடியாது. முந்தைய தீர்ப்பில் ஆடுகளை இழந்த ஆட்டுக்காரனுக்கு இத்தீர்ப்பில் ஆடுகள் மீண்டும் கிடைக்கின்றன.

இதனை குர்ஆனும், "தீர்ப்பு கூறுவதில் இருவருக்குமே கல்வியையும் ஞானத்தையும் நாம் கொடுத்தோம். சுலைமானுக்கு நியாயத்தை விளங்க வைத்தோம்'' என்று 21:79வது வசனத்தில் கூறுகிறது.

இரு தீர்ப்புகளும் நடுநிலையானவையே. எதிலும் தடுமாற்றமில்லை. முடிவில் ஒரு தெளிவு. அதனைத்தான் அல்லாஹ்வும் ""சுலைமானுக்கு நியாயத்தை விளங்க வைத்தோம்'' என்று அறிவிக்கிறான்.

இக்காலத்திலும் ஒரு வழக்கில் இரு முடிவுகள் கூறப்படுவதைக் காண்கிறோம். அதில் எது சிறந்தது என்பதை மறு ஆய்வுகள் உறுதி செய்வதற்கு முன்னுதாரமே இரு நபிகளின் இரு வேறு தீர்ப்புகள். எனவே தீர்ப்புகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இருக்க வேண்டும். அந்தத் தீர்ப்பே வழக்கிட்ட இருவரையும் ஈர்க்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.