ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இறைவன் நிழலளிப்பான்!

வறுமை வந்தபோதும் பொறுமையுடன் சகித்து பிறரிடம் யாசிக்கக் கூசுபவர்களுக்கு மற்றவர் அறியாதவாறு மறைமுகமாக உதவுவது உத்தமம். அந்த உதவி உன்னத தர்மத்திலும் உயர்ந்தது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:38 pm

மு. அ. அபுல் அமீன்

வறுமை வந்தபோதும் பொறுமையுடன் சகித்து பிறரிடம் யாசிக்கக் கூசுபவர்களுக்கு மற்றவர் அறியாதவாறு மறைமுகமாக உதவுவது உத்தமம். அந்த உதவி உன்னத தர்மத்திலும் உயர்ந்தது.

இவ்வாறுதான் தர்மம் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) எடுத்துரைத்ததை ஹஜ்ரத் அபூஹுரைரா(ரலி) அறிவிக்கும், ""இடக்கரம் அறியாது மறைவாக தர்மம் செய்கிறவனுக்கு நிழலில்லா மறுமை நாளில் இறைவன் இனிய நிழலளிப்பான்'' என்ற நீதி, புகாரி, முஸ்லீம் நூல்களில் உள்ளது.

இவ்வாறு செய்யாமல் ஊரார் முன்னிலையில் உலகோர் அறிய ஊடகங்களில் விளம்பரம் கொடுத்து செய்யும் தர்மங்களை, தர்மம் செய்வோரை அல்லாஹ் விரும்புவதில்லை என்று அருமறை குர்ஆன் 4:38 வது வசனம் கூறுகிறது. ""எவர்கள் தம் பொருளைப் பிறர் மெச்சுவதற்காக செலவழிக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை''.

நாம் ஒருவருக்கு செய்த உதவியை, தர்மத்தைப் பிறரிடம் பெருமையாகச் சொல்லி விளம்பரப்படுத்துவதை அல்லாஹ் அறவே வெறுக்கிறான் என்ற நபிகள் நாயகத்தின் நன்மொழி, ""பொய்ச் சத்தியம் செய்வோரையும் செய்த தர்மத்தைத் தம்பட்டம் அடித்து சொல்லித் திரிவோரையும் அல்லாஹ் வெறுக்கிறான் (புகாரி, முஸ்லிம்)'.

விளம்பர மோகத்தில், விவேகம் இல்லாமல், தகுதியுடையோரை விடுத்து தகுதி இல்லாதோருக்கு தர்மம் வழங்காமல் தேவை உடையோரைத் தேடிச் சென்று அள்ளி வழங்கி மகிழ்ச்சி அடைவோம். ஏக இறைவனின் அருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.