தைப்பூசத் திருநாள்!
நட்சத்திர வரிசையில் "பூசம்' எட்டாவது நட்சத்திரம். தை மாத பூசம் பெரும்பாலும் பெளர்ணமியில்தான் வரும். இந்நாளில் அனைத்து சிவன் கோயில்கள், ஆறு படைவீடுகள் உள்ளிட்ட முருகன் கோயில்களில் திருவிழாக்கள்தான்! மு


நட்சத்திர வரிசையில் "பூசம்' எட்டாவது நட்சத்திரம். தை மாத பூசம் பெரும்பாலும் பெளர்ணமியில்தான் வரும். இந்நாளில் அனைத்து சிவன் கோயில்கள், ஆறு படைவீடுகள் உள்ளிட்ட முருகன் கோயில்களில் திருவிழாக்கள்தான்!
முருக வழிபாட்டுக்கான விரத நாள்களில் முக்கியமானது தைப்பூசம். "விழா' என்றால் விழித்திருந்து செய்வது. ஆறு படைவீடுகளில் பழனிக்கே முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். பல ஊர்களிலிருந்தும் பாதயாத்திரை மேற்கொள்கிறார்கள். இந்த* பாதயாத்திரையை முதன் முதலாகத் தொடங்கியவர்கள் நகரத்தார்களே!
* அன்னை பார்வதியிடம் முருக* பெருமான் "ஞானவேல்' வாங்கிய நாள் தைப்பூசத் திருநாள். அவ்வேலைக் கொண்டே அசுரர்களை அழித்து, தேவர்களைக் காத்தான் முருகவேள். அத்தகைய அசுரர்களை அழித்த அந்த ஞானவேலை தைப்பூசத்தன்று வணங்கினால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், நல் அருளும் கிட்டும் என்பர். முருகன், தாரகாசுரனை மலையில் வேல் எறிந்து வீழ்த்திய நாள் என்றும் கூறுவர்.
* தைப்பூசத்தன்றுதான் உலகம் தோன்றியதாம். உலகில் முதன் முதலாக தண்ணீரே படைக்க* பட்டதாம். அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது. இதை மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டே அனைத்து கோயில்களிலும் தைப்பூசத்தன்று தெப்ப உற்ஸவம் நடைபெறுகிறது.
* பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளின்படி, உமாதேவியுடன் முப்பத்து முக்கோடி தேவர்களும் காண, சிவபெருமான் ஆனந்தத் தாண்டம் ஆடியது தைப்பூசநாளில்தான்.
* தில்லை மூவாயிரவர்க்கும், மன்னன் இரணியவர்மனுக்கும் நடராஜ* பெருமான் தரிசனம் தந்து அருள்பாலித்ததும் தைப்பூச நாளில்தான்.
* தேவ குருவாகிய பிரகஸ்பதிக்கு தைப்பூசம் உகந்த நாள் என்பதால், தைப்பூசத்தன்று குரு பகவானை வழிபடுவது சிறப்பானது.
* கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மோற்ஸவம் தை* பூசத்தன்று நடைபெறுகிறது. அக்கோயிலை முறைப்படி தரிசனம் செய்து "அசுவமேத* பிராகாரத்தை' வலம் வந்தால் பிரமஹத்தி தோஷம் நீங்குவதாக ஐதீகம்.
* பழனி கோயிலுக்குக் கோடிக்கணக்கான பக்தர்கள் இந்நன்னாளில் காவடி எடுத்தும், பாத யாத்திரை செய்தும் தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
* வடலூர் வள்ளலார் தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று ஜோதி ரூபமாய் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இதனைக் குறிக்கும் விதமாக வடலூரில் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
* தைப்பூச நாளில்தான் மதுரை மீனாட்சி}சொக்கநாதர் வண்டியூர் மாரியம்மன் குளத்துக்கு வந்து தெப்பம் காண்பார்கள். அதுவரை மதுரை கோயிலில் பூஜைகள் நிறுத்தி வைக்கப்படுமாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...