நினைத்ததை அருளும் சண்டிகேஸ்வரி!
அம்மனுக்கு உரிய தலங்களில் சண்டிகேஸ்வரி தனியாக இருப்பதுண்டு. அங்கெல்லாம் பக்தர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் சண்டிகேஸ்வரிக்கு பூஜையோ, வழிபாடோ செய்வதில்லை. ஆனால் வித்தியாசமாக தோகூரில் உள்ள சுந்தரே


அம்மனுக்கு உரிய தலங்களில் சண்டிகேஸ்வரி தனியாக இருப்பதுண்டு. அங்கெல்லாம் பக்தர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் சண்டிகேஸ்வரிக்கு பூஜையோ, வழிபாடோ செய்வதில்லை.
ஆனால் வித்தியாசமாக தோகூரில் உள்ள சுந்தரேசுவரர் ஆலயத்தில் சண்டிகேஸ்வரிக்கு எலுமிச்சம் பழங்களைக் கோத்து மாலையாகக் கட்டி, அதனை அன்னையின் கழுத்தில் அணிவிக்கின்றனர், கன்னிப் பெண்கள். மாலை அணிவித்த பின், தங்கள் மனதில் இருக்கும் சலனங்களையும், வேதனைகளையும் அன்னையிடம் கூறி, வேண்டியதை அளித்தருள மனமுருக பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனையின் பலனாக வேண்டியதை அருள்கிறாள் அன்னை என்பது பெண்களின் நம்பிக்கை.
இங்கே சுந்தரேஸ்வரர்- மீனாட்சி சகிதராக அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கி அமைந்துள்ளது ஆலயம். பிள்ளையார், பால தண்டாயுதபானி, லிங்கோத்பவர், பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகியோரும் அருள்பாலிக்கும் இத்தலத்தில் பெருமாள், சக்கரமும், சங்கும் தாங்கி, அபய - வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறார். கருடாழ்வார் சந்நிதியும் உள்ளது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் அருள் புரியும் இந்த தோகூர் தலம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில், கல்லணைக்கு அருகே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...