பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கொம்பையனார் கோயில்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எழில் கொஞ்சும் குற்றாலத்திற்கு வெகு அருகே காண்போரைக் கவர்ந்திழுக்கும் இயற்கை சூழ்ந்த இலஞ்சியில் குடிகொண்டு பக்தர்களுக்கு  அருள்பாலித்து வருகிறார் வரதராஜப் பெருமாள். மஹாவிஷ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:38 am

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எழில் கொஞ்சும் குற்றாலத்திற்கு வெகு அருகே காண்போரைக் கவர்ந்திழுக்கும் இயற்கை சூழ்ந்த இலஞ்சியில் குடிகொண்டு பக்தர்களுக்கு  அருள்பாலித்து வருகிறார் வரதராஜப் பெருமாள்.

மஹாவிஷ்ணு சங்கு-சக்கரதாரியாய், ஸ்ரீதேவி-பூமாதேவி சமேதரராய் எழுந்தருளியிருக்கும் இக்கோயில், கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் கண்டது.

இக்கோயிலில் மூலவர் தவிர உற்சவர், விசுவக்சேனர், பெரிய திருவடி என அழைக்கப்படும் கருட பகவான் ஆகியோரும் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர்.

இக்கோயிலில்  சித்திரை வருடப் பிறப்பு, ஆடிப்பூரம், புரட்டாசி சனிக்கிழமைகள், புரட்டாசி திருவோணம், தை மாதப் பிறப்பு ஆகிய நாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவதுடன் கருட சேவையும் எழிலோடு நடைபெற்று வருகிறது.

மேலும் மார்கழி மாதத்தில் தகுந்த ஆராதனைகள் செய்யப்படுகின்றன. பங்குனி மாதத்தில் ராமரின் அவதார தினமான ராமநவமி விழா, கர்ப்ப உற்சவமாக 10 நாட்கள் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

38 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்பொழுது இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிதாக சாலைக் கோபுரம் அமைக்கும் பணியும், சொர்க்கவாசல் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது; மூலவர் எழுந்தருளியுள்ள கோபுரமும் புதுப்பிக்கப்படப் போகிறது.

புதிதாக ஆஞ்சநேயர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இக்கோயில் கோபுரத்தில் பெருமாளின் 10 அவதாரங்களும் வடிக்கப்பட்டுள்ளன என்பது சிறப்பம்சம் ஆகும்.

கும்பாபிஷேகத் திருப்பணி

இத்தகைய பழம் பெருமை மிக்க இக்கோயிலின் கும்பாபிஷேகம், வரும் ஜூன் மாதம் 24-ம் தேதியன்று இறையருளால் நடைபெறத் தேதி குறிக்கப்பட்டுள்ளது.

முழுவதும் நன்கொடையாளர்களின் உதவியால் மட்டுமே திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், எவ்விதத் தொய்வும் இன்றி பெருமாளின் சக்தியால் பணிகள் நடைபெற்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர்.

மேலும் வரதராஜப்பெருமாள், பக்தர்களின் கனவில் தோன்றி அவர்களை இவ்விடத்திற்கு வரச் செய்து அவர்களையும் திருப்பணிகளில் பங்கு கொள்ளச் செய்வதாகவும் பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர்.

திருப்பணிகளில் பங்கு கொள்ள விரும்பும் பக்தர்கள், திருப்பணிக்குழு பொருளாளர் திரிகூடராசப்பனை தொடர்பு கொள்ளலாம். கைபேசி எண் : 94439 71013.

சாரல் சமயத்தில் உடலைக் குளுமையாக்க குற்றாலத்திற்கு வருகை தரும் பக்தர்கள், இறையருளில் திளைத்து தங்கள் மனதைக் குளுமையாக்க இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்ல வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.