பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
புதிய தொடியை அணிந்துள்ள பெண்ணே! நமக்குச் சோதனை வரும் காலத்து உதவுவார் என்று நம்பிக்கையோடு வளர்க்கப்பெற்ற நண்பர் தேவை வரும்போது உதவாது ஒதுங்கிவிடுவர்.


"எய்ப்புழி வைப்பாம்' எனப் போற்றப்பட்டவர்
உற்றுழி ஒன்றுக்கு உதவலராய் - பைந்தொடீஇ!
அச்சு இடையிட்டுத் திரியின், அது அன்றோ,
மச்சு ஏற்றி, ஏணி களைவு. (பாடல்: 291)
புதிய தொடியை அணிந்துள்ள பெண்ணே! நமக்குச் சோதனை வரும் காலத்து உதவுவார் என்று நம்பிக்கையோடு வளர்க்கப்பெற்ற நண்பர் தேவை வரும்போது உதவாது ஒதுங்கிவிடுவர். அத்தகையோர் நட்பு உயரே ஏறுவதற்கு உதவியாக ஏணியை வைத்து ஏற்றிவிட்டு இறங்க வழியில்லாமல் ஏணியை எடுத்துவிடுவோர் செயலைப் போன்றது ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...