சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டார். உரிய வலிமை இல்லாது இருப்பார். கொடிய சொற்களைப் பேசுவார். எவருக்கும் உற்ற நேரத்தில் உதவி எதுவும் செய்யார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2023, 11:45 am

வழங்கார், வலி இலார், வாய்ச் சொல்லும் பொல்லார்,
உழந்து ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார்,
இகழ்ந்தது இல் செல்வம் பெறுதல் - அதுவே
பழஞ் செய் போர்பு ஈன்று விடல்.     (பாடல்: 292)

யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டார். உரிய வலிமை இல்லாது இருப்பார். கொடிய சொற்களைப் பேசுவார். எவருக்கும் உற்ற நேரத்தில் உதவி எதுவும் செய்யார். அத்தகையோர் பெரிய அளவில் செல்வம் பெற்று இருப்பது எப்படி? அது யாரோ விதைத்து விட்டுப் போன வயல் விளைந்து இருப்பது போன்றது ஆகும். அவருடைய செல்வம் அன்று. அவர் முன்னோர் சேர்த்த செல்வம் என்பது கருத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.