சொல் புதிது - 3
திருக்குறளையும் அர்த்த சாஸ்திரத்தையும் ஷேக்ஸ்பியரின் இலக்கியங்களையும் ஒப்பிட்டு முதுமுனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யும் முனைவர் பிருந்தா கோவையிலிருந்து கேட்டார். ஐய்ற்ங்ழ்ய்ள்ட்ண்ல் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்?


திருக்குறளையும் அர்த்த சாஸ்திரத்தையும் ஷேக்ஸ்பியரின் இலக்கியங்களையும் ஒப்பிட்டு முதுமுனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யும் முனைவர் பிருந்தா கோவையிலிருந்து கேட்டார். ஐய்ற்ங்ழ்ய்ள்ட்ண்ல் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்?
அமெரிக்காவில் படிக்கும் நண்பரின் மகனுக்கு மொசில்லா இணையதள நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் கிடைத்துள்ளதாம். அந்த நிறுவனம், அதில் சேருகிறவர்கள் அவர்கள் தாய் மொழியில் எழுதப்பட்டப் பதிவைச் சட்டையில் பொருத்திக்கொண்டு பணிக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளது.
படிப்புக்கும் வேலைக்குமான இடைவெளியைக் குறைக்கவும் படிப்பதைச் செயற்படுத்திப் பார்க்கவும் படிக்கிற காலத்திலேயே மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் உலகம் முழுதும் பெரும்பாலான நாடுகளில் இந்த ஏற்பாடு இப்போது நடைமுறையில் உள்ளது.
சில நாடுகள் பள்ளி மாணவர்களுக்கே இந்த வாய்ப்பினை வழங்கத் தொடங்கியுள்ளது. பெரும்பாலும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டாம் ஆண்டு முடித்ததும்
வருகிற விடுமுறைக் காலத்தில் இந்த வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.
ஊதியத்துடனும் ஊதியம் இல்லாமலும் நிறுவனங்கள் வாய்ப்புகளை வழங்குகின்றன. சில நிறுவனங்கள் தங்கள் நிறுவன மேம்பாட்டிற்கான ஆய்வுகளை இவர்கள் மூலம் நடத்திக் கொள்கின்றன. மாணவர்கள் தாங்கள் விரும்பும் திட்டத்திலும் ஆய்வினை மேற்கொண்டு அறிக்கை அளிக்கின்றனர். வணிக நோக்கு இல்லாத அறக்கட்டளை நிறுவனங்களுக்கு மாணவர்களே ஊதியம் இல்லாமல் பணியாற்றி உதவுகின்றனர்.
மாணவர்கள் படிக்கிற காலத்தே பணிச்சூழலுக்கு அறிமுகமாகிற வாய்ப்பு கிடைக்கிறது. இப் பணிக்காலம் இரண்டு மாதம் முதல் மூன்று மாதம் வரையாகும். வாய்ப்பு தரும்
நிறுவனங்களிலேயே பின்னர் அவர்கள் பணிபெறவும் வாய்ப்பு கிட்டலாம்.
ஒரு நாட்டில் படிக்கும் மாணவர் இன்னொரு நாட்டில் இந்த வாய்ப்பினைப் பெறலாம். இன்றைய நிலையில் சீனாவில் இந்த வாய்ப்பினைப் பெறுவதற்குப் போட்டிகள் அதிகமாம். வசதி உள்ளவர்கள் தங்கள் செலவில் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விமானச் செலவு, தங்கும் விடுதி, மடிகணினி உட்பட அனைத்துச் செலவுகளையும் சில நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. வசதியற்றவர்களுக்கு உதவ சில சேவை நிறுவனங்கள் முன் வருகின்றன.
வெளிநாட்டுக்குச் செல்லாமல் இருந்த இடத்திலிருந்தே வெளிநாட்டு நிறுவனத்திலும் இந்த வாய்ப்பினைப் பெற ஸ்ண்ழ்ற்ன்ஹப் ஐய்ற்ங்ழ்ய்ள்ட்ண்ல் உண்டு. தொலைபேசி, மின்-அஞ்சல், இணையதளம் வழியாகப் பணி செய்யலாம்.
இண்டர்ன்ஷிப் என்பதற்கு வாசகர்களின் தமிழாக்கம்:
இரா.பொ.வீரையன் - பணிமுன் பயிற்சி/பட்டறிவுப் பயிற்சி
என்.ஆர். ஸத்தியமூர்த்தி - இருக்கைப் பயிற்சி
கோ.மன்றவாணன் - பணிப்பழகல்
செல்வம் ரத்தினசாமி, சி. இராமச்சந்திரன் - உள்ளுறைப் பயிற்சி
செ.சத்தியசீலன் - உள்ளிருப்புப் பயிற்சி
வெ.ஆனந்தகிருஷ்ணன் - வேலைவாய்ப்பு
செ.நாராயணசாமி - பணியிடப் பயிற்சி
முனைவர் க.அன்பழகன் - ஈரொப்பு வேலை
டி.வி.கிருஷ்ணசாமி - கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்துதல்
பழனி கோ.முத்துமாணிக்கம் - பயிற்சி ஒப்பந்தம்
முனைவர் பா.ஜம்புலிங்கம் - தொழிலினப் பணியாளர்
மேற்கூறிய சொற்கள் "இண்டர்ன்ஷிப்' என்பதை முழுதும் உள்வாங்கி வெளிப்படுத்தும் நிலையில் இல்லை. அது பணியில் சேர்ந்து பெறும் பயிற்சி இல்லை; படிக்கும் காலத்தில் மாணவர்கள் மேற்கொள்ளும் பணி; மாணவராக இருந்துகொண்டே பணிசெய்கிற வாய்ப்பு.
எனவே. இண்டர்ன்ஷிப் என்பதைப் "பணி மாணவர்' என்று சொல்லலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...