தமிழ்நாட்டின் வத்தலகுண்டிலும், கேரளம், மகாராஷ்டிர மாநிலங்களிலும் வெற்றிகரமாக 'வாடகைக்கு ஒரு மா மரம்' எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு மரத்தை நட்டு, அதற்கு நீர் பாய்ச்சி, பராமரித்து வளர்த்து, அதில் காய்க்கும் பழங்களை உண்பதற்குப் பதிலாக, மரத்தை வாடகைக்கு எடுக்கலாம். சீசன்களில் பழங்களைப் பெறலாம்.
கேரளத்தைச் சேர்ந்த 'ரென்ட் எ ட்ரீ ' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தினர் கோடைக்கால கனியான 'அல்போன்ஸô' ரக மாம்பழங்களை விற்பதை புதுமையான வணிக மாதிரியாக மாற்றியுள்ளனர்.
அந்த நிறுவனத்தின் உரிமையாளர் உமேஷ் தாமோதரனிடம் பேசியபோது:
'பெங்களூரில் 2018 முதல் 2023-ஆம் ஆண்டு வரை கல்வி, தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வந்தேன். கொச்சி - பெங்களூரு மாநகரங்களுக்கு இடையே அடிக்கடி பயணம் செய்வேன். பாலக்காட்டில் ஏற்றுமதித் தரம் வாய்ந்த அல்போன்ஸô ரக மாம்பழங்களின் தரத்தால் ஈர்க்கப்பட்ட நான், சில பெட்டிகளை பெங்களூருக்கு வாங்கி வந்தேன்.
இவற்றை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அன்பளிப்பாக அளித்தேன். ருசித்து மகிழ்ந்த அவர்களுக்காக அந்த சீசன் முழுவதும் மாம்பழங்களை வாங்கிச் சென்றேன். இவர்கள் என்னிடம், 'ஒரே மரத்தில் காய்க்கும் மாம்பழங்கள் கிடைக்க வழியுள்ளதா?' என்று வினவியதே 'ரென்ட் எ ட்ரீ' என்ற நிறுவனத்தைத் தொடங்குவதற்கான முயற்சியாகும்.
மகாராஷ்டிரத்தின் ரத்னகிரி, தமிழ்நாட்டின் வத்தலகுண்டு, கேரளத்தின் பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250 ஏக்கர் அல்போன்ஸô மாம்பழத் தோட்டங்களை எனது நிறுவனம் நிர்வகித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைக்கேற்றவாறு விருப்பமான மாமரத்தைத் தேர்ந்தெடுத்து, நிறுவனத்தின் இணையதளம் மூலம் வாடகைக்கு எடுக்கலாம். இதன்படி, நல்ல தரமான மாம்பழங்களை சாப்பிடலாம். பிடித்தமானவர்களுக்கு அன்பளிப்பும் செய்யலாம்.
ஏற்கெனவே அறிமுகமான 'தேக்கு மரம் வளர்ப்போம்', 'ஆடு வளர்ப்போம்' போன்ற திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து பல மடங்கு ஆக்குவதாகச் சொல்லும் திட்டமல்ல இது. தானே கனிந்த தரமான மாம்பழங்களை சுவைக்க மட்டும் உருவான திட்டம் இது. ஆண்டுக்கு 30 முதல் 50 கிலோ, 45 முதல் 75 கிலோ, 60 முதல் 90 கிலோ மாம்பழங்கள் என மூன்று முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, திட்டத்தில் சேராதவர்களும் முன்பதிவு செய்து மாம்பழங்களை வாங்கிக் கொள்ளலாம்.
ஒரு மரத்தின் ஆண்டு வாடகை ரூ. 10,300-இல் தொடங்குகிறது. இதுவரை, சுமார் 200 பேர் பதிவு செய்துள்ளனர். வாடிக்கையாளர்கள் வாடகைக்கு எடுக்கும் தங்கள் மரத்தின் நிலைமை குறித்த தகவல்களை மாதம்தோறும் அனுப்பிவைக்கப்படும்.
அவர்கள் பண்ணைக்கு நேரடியாக வந்து தங்கள் மரத்தைப் பார்த்தும் செல்லலாம். மாம்பழப் பருவம் ஆண்டில் நான்கு மாதங்கள் நீடிக்கும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பழங்கள் அறுவடை செய்யப்படும். இருந்தாலும், மாம்பழப் பருவம் மாநிலங்களைப் பொறுத்து மாறுபடும்.
பருவத்தில் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பழங்கள் அட்டைப் பெட்டியில் அனுப்பப்படுகின்றன. மாம்பழங்கள் விரைவில் கெட்டுப் போகக் கூடிய தன்மை கொண்டவை என்பதால், அவற்றை முழுமையாகப் பழுத்த நிலையில் சந்தைக்குக் கொண்டுவருவது சாத்தியமற்றது.
வியாபாரிகள் சிலர் பழங்களைப் பழுக்க வைக்க செயற்கை முறைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால், வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. இயற்கையாகப் பழுத்த மாம்பழத்தின் ஒரிஜினல் சுவையை யாரும் சுவைத்து அனுபவிக்க முடியாமல் போகிறது.
விவசாயிகளிடம் குத்தகை எடுத்த நிலங்களில் உள்ள மாமரங்களை உள்ளூர் தொழிலாளர்களின் உதவியுடன் பராமரிக்கிறோம். தேவைக்குப் போக மிஞ்சும் மாம்பழங்களை வியாபாரிகளுக்கு விற்கிறோம். மாமரங்கள் பராமரிப்பில் குறைந்தபட்ச பூச்சி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.
ரத்னகிரி அல்போன்ஸô மாம்பழம் அளவில் பெரிதாக இருக்கும். வத்தலகுண்டு அல்போன்ஸô வடிவத்தில் சிறிதாக இருந்தாலும் சுவையில் முதலிடம் பிடிக்கிறது. உலகில் மிக மிக அதிக விலையில் விற்கப்படும் ஜப்பான் நாட்டின் 'மியசாகி' மாமரத்தை ஒட்டு முறையில் வளர்க்க முயற்சித்து வருகிறோம்.
உயர்ரக மாமரங்களையும் நட்டு வளர்த்து வருகிறோம். அவை காய்க்க சில ஆண்டுகள் ஆகும். ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற அரிய வகை வெளிநாட்டுப் பழங்களைத் தரும் மரங்களையும் விவசாயிகளுடன் இணைந்து, 'வாடகைக்கு ஒரு மரம்' திட்டம் மூலம் பழங்களை விற்பனை செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்' என்கிறார் உமேஷ் தாமோதரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கவனம் பெறுமா மின் இறைவைப் பாசனத் திட்டம்
கடன் நெருக்கடியில் தமிழ்நாடு?

தமிழ்நாட்டின் மருத்துவத் துறையில் ஒரு காலிப் பணியிடம்கூட இல்லை
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ப்ளூ பிரிண்ட்! - ஸ்டாலினின் 14 முக்கிய அம்சங்கள்!!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


