மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் ஏப்ரல் 3- ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. மக்களிடம் மரபு வழியாகப் பரவி செல்வாக்குப் பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக 'தி டார்க் ஹெவன்' உருவாகியுள்ளது.
இந்தப் படம் ஒரு மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூலை மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது. இப்படம் குறித்து, படத்தைத் தயாரித்து இயக்கும் இயக்குநர் பாலாஜி பேசும் போது,'இந்தப் படம், தடயங்களே இல்லாமல் நடக்கும் தொடர் கொலைகளை, காவல் அதிகாரி எப்படிக் கையாள்கிறார் என்பதை மையமாகக் கொண்டது. இப்படத்தின் கதாநாயகனாக சித்து நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் தர்ஷிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இவர்களுடன் நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ரித்விகா, அருள் ஜோதி, ஜெயகுமார் ஜானகிராமன் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு இதில் புதுவிதமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். எனது முதல் படத்தில் பணியாற்றிய மணிகண்டன் பிகே இதிலும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அதே போல் எடிட்டிங் ராஜா ஆறுமுகம் செய்துள்ளார். இசையமைப்பாளராக 'ஜாக்கி' படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி பணிபுரிந்துள்ளார்.இவர்கள் அனைவரும் என் நண்பர்கள் .
இதன் படப்பிடிப்பு வண்டிபெரியார், அச்சன் கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி மற்றும் முக்கூடல் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டன. இறுதிக்கட்ட மெருகேற்றும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன' என்றார் இயக்குநர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பராமரிப்புப் பணிகளுக்காக பழனி ரோப் காா் இன்று நிறுத்தம்

ஒரு வாரம் நடந்ததை ஒரு நாளில் பார்க்க... அய்யனார் துணை தொடரின் புதிய முயற்சி!

பட்ஜெட் கூட்டத் தொடர்: ஜன. 27-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

