/

பள்ளிச்சட்டம்பி

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படம் விரைவில் வெளியாக உள்ளது.

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 11:05 am

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது அவரின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த போஸ்டரில் கயாடு லோஹர் ஒரு விண்டேஜ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இருப்பினும் படத்தில் அவரது கேரக்டரின் பெயரை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.

கன்னடத் திரைப்படமான 'முகில்பேட்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு, 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தைக் கவர்ந்தது. பின்னர் கடந்த ஆண்டு வெளியான 'டிராகன்' அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பள்ளிச்சட்டம்பி } கயாடு லோஹரின் மூன்றாவது மலையான திரைப்படமாகும். துல்கர் சல்மான் நடிக்கும் 'ஐ எம் கேம்' படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது.

கயாடு லோஹர் பல தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் பள்ளிச்சட்டம்பி ஏப்ரல் மாதம் 9 }ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் ஒரு முழுமையான மாஸான ஆக்சன் பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோஷன் போஸ்டர் } டைட்டில் போஸ்டர் மற்றும் டொவினோ தாமஸ் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெறும் விடியோக்கள் ஆகிய அனைத்தும் வெளியாகி, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கின்றன. திரைக்கதையை எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். 950}60 காலகட்டத்தில் கேரளாவில் நடைபெற்ற கதையை இப்படம் சொல்ல வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.