ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திரைக் கதிர்

நடிகர் அஜித்குமாருக்குக் கடந்தாண்டு 'குட் பேட் அக்லி' படம் வெளியாகியிருந்தது.

actor ajithkumar

நடிகர் அஜித் குமார்

Published On :9 ஆகஸ்ட் 2026, 4:18 am IST

நடிகர் அஜித்குமாருக்குக் கடந்தாண்டு 'குட் பேட் அக்லி' படம் வெளியாகியிருந்தது. ஆனால், அந்தப் படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. ரேஸிங் பக்கமே முழுக் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அஜித்தின் 64-ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அஜித்தின் 64-ஆவது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகிறார் என்பதை அவரே பல பேட்டிகளில் உறுதிப்படுத்தியிருந்தார். தற்போது அந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பையும், படத்தின் தலைப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

c இயக்கும் இந்தப் படத்துக்கு 'டேர் டெவில்' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் மூலம் அஜித்குமாரின் மனைவி ஷாலினி தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். 'பிரேவ் ஹார்ட்ஸ்' என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, முதல் தயாரிப்பாக இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார்.

மாதவன்

மாதவன்

நடிகர் மாதவனுக்கு, மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் என்னும் பகுதியில் சுமார் ரூ. 17.5 கோடி மதிப்பிலான வீடு ஒன்று உள்ளது. பொதுவாகப் பிரபலங்களின் வீடுகள் என்றாலே அதிக பகட்டும், ஆடம்பரமும் நிறைந்திருக்கும். ஆனால், மாதவனின் வீடோ அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அமைதியையும், இயற்கையையும் பிரதிபலிக்கும் வகையில் மிகவும் ரசனையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 4,182 சதுர அடியில் பரந்து விரிந்துள்ள இந்த வீடு 5 படுக்கையறைகளைக் கொண்டுள்ளது. அதிகப்படியான ஆடம்பரப் பொருள்களைத் தவிர்த்து, இயற்கையான மர வேலைப்பாடுகளும், கண்களை உறுத்தாத வெளிர் வண்ணங்களும் இந்த வீட்டுக்கு ஓர் இதமான தோற்றத்தைத் தருகின்றன. பல கோடிகள் மதிப்புள்ள வீடு என்றாலும், எந்தவொரு தேவையற்ற பகட்டும் இல்லாமல், மிகவும் நேர்த்தியாக மாதவன் இந்த வீட்டை வடிவமைத்துள்ளார். இயற்கை, எளிமை, மன அமைதி ஆகியவற்றின் மீது அவருக்கு இருக்கும் அதீத காதலை இந்த வீடு முழுமையாகப் பிரதிபலிக்கிறது.

கவின் நடிப்பில் கடைசியாக, கடந்த ஆண்டு 'மாஸ்க்' படம் திரைக்கு வந்திருந்தது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி, நயன்தாராவுடன் அவர் நடித்திருக்கும் 'ஹாய்' படம் வெளியாகிறது. இதனை தொடர்ந்து, 'பேர் சொல்லும் பிள்ளை' படம், அறிமுக இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் நடிக்கும் படம் என பிஸியாக இருக்கிறார். கவினுக்கும் அவருடைய காதலி மோனிஷாவுக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது. குடும்பத்தினர், நெருங்கிய திரைத்துறை வட்டாரம் என இவர்களின் திருமணம் எளிமையாகவே நடந்திருந்தது.

அண்மையில் இந்தத் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். இந்தத் தகவலை அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் நடிகர் கவின். அவருடைய எக்ஸ் பக்கத்தில், ' எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஓர்ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்' எனப்பதிவிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.