செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ஹிட்லர்'. விஜய் ஆண்டனி, ரியா சுமன், கெüதம் வாசுதேவ்மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், தமிழ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். "படை வீரன்', "வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களுக்குப் பின் இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் தனா. படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... ""அதிகாரம் என்பது சகல மட்டங்களிலும் நம்மை படுத்தி எடுக்கிறது.
கோயில்களில், மருத்துவமனைகளில், பள்ளிகளில், சாமானியர்கள் அத்தனை பேரும் காத்திருக்க அதிகாரம் படைத்தவர்கள் முதல் ஆளாக உள்ளே போய் வருகிறார்கள். அதிகாரம் படைத்தவர்களின் தூரத்து சொந்தங்களுக்கு கூட பயம் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நாடு எப்போதும் அதிகாரம் உள்ளவர்களுக்கு ஒன்றாகவும், இல்லாதவர்களுக்கு வேறாகவும் இருக்கிறது. ஒரு நடிகைக்காக அடித்துக் கொள்கிற இரண்டு நடிகர்களை எந்த போலீஸýம் எதுவும் செய்ய முடியாது இந்த தேசத்தில். ஆனால், சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் பொரி கடலை விற்கும் கிழவனை கொண்டு போய் ராத்திரியெல்லாம் ஸ்டேஷனில் உட்காரவைத்து துன்புறுத்தும். நேற்று வரை ஒன்ரையணாவுக்கு பெறாதவர்கள், கவுன்சிலர் ஆனதில், எம்.எல்.ஏ. ஆனதில்.... கார், அடியாள்கள், செல்வாக்கு என பறக்கிறார்கள்...
எல்லாவற்றையும் சாமனியன் சாலையில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான். இப்படித்தான் இந்தக் கதையின் உள்ளே போனேன்.
உங்களுக்கு இது வேறு அனுபவத்தை தரும். அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படத்தின் கரு'' என்றார் இயக்குநர். விவேக் - மெர்வின் இசையமைக்கும் இப்படத்துக்கு நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


