மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஏற்றுமதியாகும் ஜாதிக்காய்கள்..!

கேம்பிரிட்ஜில் 'நானோ தொழில் நுட்பம்' பொறியாளராகப் பணிபுரிந்துவந்த கே. ரஞ்சித்குமார், பொள்ளாச்சியில் ஜாதிக்காய்களைப் பயிரிட்டு உலர்த்தி கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார்.

News image

ஜாதிக்காய்கள்

Updated On :31 ஆகஸ்ட் 2024, 6:30 pm

கேம்பிரிட்ஜில் 'நானோ தொழில் நுட்பம்' பொறியாளராகப் பணிபுரிந்துவந்த கே. ரஞ்சித்குமார், பொள்ளாச்சியில் ஜாதிக்காய்களைப் பயிரிட்டு உலர்த்தி கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார்.

அவரிடம் பேசியபோது:

'தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், கேம்பிரிட்ஜ்ஜில் இருந்து எனது ஊரான கோட்டூர் வந்தேன். பெற்றோருக்காக ஊரில் தங்க வேண்டிய சூழ்நிலை.

தொழிலுக்காக எங்கள் தென்னந்தோப்பில் ஊடுபயிராக, மருத்துவக் குணங்களைக் கொண்ட ஜாதிக்காய் கன்றுகளை நட்டு வளர்க்க ஆரம்பித்தேன்.

ஜாதிக்காய் காய்ந்த விதை அல்லது கொட்டையாகும். இந்தக் கொட்டையின் உச்சியில் தொப்பியாக ஓட்டிப் பிடித்திருப்பதுதான் ஜாதிபத்ரி. ஜாதிக்காயின் சதை பகுதியில் ஊறுகாய் தயாரிக்கலாம். உலர்த்திப் பொடியாக்கி மசாலா பொடிகளுடன் சேர்க்கலாம். ஜாதிக்காயில் எந்தப் பாகமும் வீண் போகாது.

2022-இல் இந்தியா 268 லட்சம் டாலர் மதிப்புள்ள ஜாதிக்காய்களை ஏற்றுமதி செய்து, உலகின் இரண்டாவது பெரிய ஜாதிக்காய் ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது.

பொள்ளாச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 விவசாயிகள் ஜாதிக்காய்களைப் பயிரிட்டாலும், அவர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இடைத்தரகர்கள் லாபத்தை எடுத்துகொள்வதால் பெரிதாக லாபமும் கிடைக்கவில்லை.

பொள்ளாச்சியில் நியாயமான, லாபகரமான ஜாதிக்காய் வர்த்தகம் நடக்க உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை 2022-இல் உருவாக்கினேன். பொள்ளாச்சி பகுதி ஜாதிக்காய், ஜாதிபத்ரி கேரளத்தில் கிடைப்பதைவிட தரமானது என்று புரிந்து கொண்டேன்.

எனவே, பொள்ளாச்சி ஜாதிக்காய், ஜாதிபத்ரிக்கு உலக அரங்கில் ஒரு முக்கிய இடத்தை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். வல்லுநர்களைக் கொண்டு விஞ்ஞானச் சாகுபடி முறைகள், பதப்படுத்தும் முறைகளை விவசாயிகளுக்கு வழங்கினேன். இதனால் விவசாயிகள் உலக சந்தை, தர நிர்ணய முறைகளை அறிந்தனர்.

ஜாதிக்காய் அறுவடை காலம் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கும். இதற்குத் தேவையான மழைப்பொழிவு , வறண்ட காலநிலை, சூடான, மிதமான ஈரப்பதமான காலநிலை பொள்ளாச்சியில் பகுதியில் உள்ளது.

ஜாதிக்காய் கொட்டை, ஜாதிபத்ரி இரண்டிலும் பூஞ்சையின் பாதிப்பு இருக்கிறதா? என்ற பரிசோதனை முக்கியமானது. உடைந்த கொட்டை , பூஞ்சை பாதித்த, முதிர்ச்சி அடையாத கொட்டைகள் அகற்றப்படும். நல்ல தரமான கொட்டைகள் சுத்தமான சணல் பைகள், பெரிய டிரம்களில் பாதுகாக்கப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், நாங்கள் சுமார் 48 டன் ஜாதிக்காய், இதர பொருள்களை விற்றுள்ளோம். ஆண்டு வருவாய் சுமார் ரூ.3 கோடி. நிறுவனத்துக்குக் குறைந்தபட்ச லாபத்தைத் தக்கவைத்தவுடன், வருவாயின் பெரும்பகுதி விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது, ஏற்றுமதியைக் கூட்ட வேண்டும். ஜாதிக்காய் சாகுபடியை அதிகரிக்க வேண்டும். இவைதான் எங்களின் இலக்கு. பொள்ளாச்சி ஜாதிக்காய்க்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமாக உள்ளது'' என்கிறார் ரஞ்சித் குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.