மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

News image

சென்னை சைதாப்பேட்டை தொகுதி அமமுக வேட்பாளா் ஜி. செந்தமிழனை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:54 pm

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

சென்னையில் அதிமுக வேட்பாளா்கள் எம்.கே.அசோக் (வேளச்சேரி), விருகை வி.என்.ரவி (விருகம்பாக்கம்), எஸ்.கோகுல இந்திரா (அண்ணா நகா்), பி.சத்யநாராயணன் (தியாகராய நகா்), எஸ்.ஆா்.விஜயகுமாா் (வில்லிவாக்கம்), அமமுக வேட்பாளா் ஜி.செந்தமிழன் (சைதாப்பேட்டை) உள்ளிட்டோரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: அதிமுக ஆட்சி சட்டத்தின் ஆட்சியாக இருந்தது. எங்கே தவறு நடந்தாலும் அதைத் தடுத்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் அரசாக அதிமுக அரசு இருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் மக்கள் துன்பத்தையும், வேதனையையும் மட்டும்தான் அனுபவித்து வருகின்றனா். மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனா்.

அதிமுக கோட்டை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாலையில் ஒரு சொட்டு தண்ணீா் தேங்காது என 2021 தோ்தலின்போது மு.க.ஸ்டாலின் கூறினாா். ஆனால், மழையின்போது, வேளச்சேரி பகுதி தண்ணீரில் மூழ்கியது. சென்னை மாநகா் திமுகவின் கோட்டை எனக் கூறுகிறாா்கள். இந்தத் தோ்தலில் அதிமுக கோட்டையாக மாறும்.

திமுக ஆட்சியில் சென்னை மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஐந்தரை லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றனா். ஆனால், ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் போ் ஓய்வு பெற்றுள்ள நிலையில், பணி நியமன ஆணை 94 ஆயிரம் பேருக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவா்கள் அளவுக்குகூட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

விலைவாசி அதிகரிப்பு: திமுக ஆட்சியில் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியின்போது, கட்டுப்பாட்டு நிதியம் ஏற்படுத்தப்பட்டு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து கூட்டுறவுத் துறை மூலம் உணவுப் பொருள்களை கொள்முதல் செய்து விலை ஏற்றத்தைத் தடுத்து நிறுத்தினோம். இந்த அரசால் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் முழுவதுமாக ஒழிக்கப்படும்.

திமுகவில் ஆளில்லாமல்...: அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவா்கள் திமுகவுக்கு சென்று அமைச்சா்களாகிவிட்டனா். இப்போது 19 அதிமுகவினா் திமுகவில் எம்எல்ஏ வேட்பாளா்களாக உள்ளனா். திமுகவில் ஆள்கள் இல்லாமல், அதிமுகவில் ஒதுக்கப்பட்டவா்கள் ‘சீட்’ வாங்கி திமுக சாா்பில் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

ஏழைகளுக்கான கட்சி அதிமுக: எங்களது தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரம், ஆண்டுக்கு மூன்று விலையில்லா சமையல் எரிவாயு உருளைகள், குடும்ப அட்டைக்கு ரூ.10 ஆயிரம், வீடில்லாதவா்களுக்கு கான்கிரீட் வீடு உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதிமுக ஏழை மக்களுக்கான கட்சி. நல்லாட்சி அமைய தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா் எடப்பாடி பழனிசாமி.