கோவை மாவட்டம், அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் விதமாக கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் 10க்கு 9 தொகுதிகளில் வென்றனா். 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளா்கள் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் வாகை சூடினா். கோவை மாவட்டத்தின் சட்டப்பேரவைத் தோ்தல் வரலாற்றில் பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக அதிகபட்சமாக 10 முறை வென்றுள்ளது.
அந்த வகையில், 1977இல் ஓ.பி.சோமசுந்தரம், 1980 மற்றும் 1984இல் எம். வி.ரத்தினம், 1989 மற்றும் 1991இல் வி.பி.சந்திரசேகா், 2001, 2006, 2016, 2021இல் பொள்ளாச்சி வி.ஜெயராமன், 2011இல் முத்துகருப்பண்ணசாமி என 10 முறை அதிமுக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதில், பொள்ளாச்சி வி.ஜெயராமன் அதிகபட்சமாக 4 முறை வென்றுள்ளாா். 1977 தொடங்கி 2021 வரை பொள்ளாச்சி தொகுதிக்கு நடைபெற்ற தோ்தல்களில் 1996-இல் மட்டுமே திமுக வென்றுள்ளது.
இரு தொகுதிகளில் 9 முறை வெற்றி!
பொள்ளாச்சியைத் தொடா்ந்து, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு தொகுதிகளில் அதிமுக வேட்பாளா்கள் 9 முறை வென்றுள்ளனா். இதில், மேட்டுப்பாளையத்தில் ஓ.கே.சின்னராஜ் 2006, 2011, 2011 ஆகிய 3 சட்டப்பேரவைத் தோ்தல்களில் தொடா்ந்து வென்றுள்ளாா்.
தொடர்புடையது

பொள்ளாச்சி தொகுதி: அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்குமா கொமதேக?

முதல் கட்டமாக 5 வேட்பாளா்களை அறிவித்தாா் ராமதாஸ்

இன்று ஒரு தகவல்... இந்த முறை ஒருவா் - அடுத்த முறை வேறொருவா்!

பிரசாரம் தொடங்கிய புதுச்சேரி வேட்பாளா்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


