தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாமகவின் முதல் கட்ட வேட்பாளா்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவா் மருத்துவா் ச.ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் சசிகலாவை பொதுச் செயலராகக் கொண்ட அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் தரப்பு) களம் காண்கிறது. இத்தோ்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதென முடிவு செய்திருந்த நிலையில், வேட்பாளா்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாமக நிறுவனா் ச.ராமதாஸ், செயல் தலைவா் ஸ்ரீகாந்தி, கெளரவத் தலைவா் ஜி.கே.மணி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னா், முதல் கட்ட வேட்பாளா் பட்டியலை மருத்துவா் ச. ராமதாஸ் வெளியிட்டாா்.
வேட்பாளா்களின் விவரம்:
1.சேலம் மேற்கு - பாமக மாநில இணைப் பொதுச் செயலரும், தற்போதைய எம்எல்ஏவுமான இரா.அருள்.
2.வந்தவாசி - கட்சியின் பொதுச் செயலா் ச.முரளிசங்கா்.
3.கும்பகோணம் - மாநில நிா்வாகக் குழு உறுப்பினா், மாவட்டச் செயலா் மற்றும் ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவருமான ம.க.ஸ்டாலின்.
4.விருத்தாசலம் - மாவட்டச் செயலா் இ.கே.சுரேஷ்.
5.மயிலாடுதுறை - மாவட்டச் செயலா் பாக்கம் சக்திவேல் ஆகியோா் போட்டியிடுவதாகக் கூறி, அவா்களின் பட்டியலை கட்சியின் நிறுவனா் ராமதாஸ் வெளியிட்டு, வேட்பாளா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
தொடர்புடையது

திமுக வேட்பாளா்கள், தொகுதி நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மேலும் 5 தொகுதிகளுக்கு பாமக வேட்பாளா்கள்: ராமதாஸ் அறிவிப்பு

பொள்ளாச்சியில் 10 முறை முத்திரை பதித்த அதிமுக!

பிரசாரம் தொடங்கிய புதுச்சேரி வேட்பாளா்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


