லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புத்தாண்டு பரிசு

அந்த நாள்களில் எம்ஜிஆரின் படப்பிடிப்புகளின்போது மதிய உணவு வேளைகளில் அவரோடு சிலராவது ஒன்று சேர்ந்து உணவு அருந்துவர். 

News image
Updated On :24 செப்டம்பர் 2023, 12:34 pm


அந்த நாள்களில் எம்ஜிஆரின் படப்பிடிப்புகளின்போது மதிய உணவு வேளைகளில் அவரோடு சிலராவது ஒன்று சேர்ந்து உணவு அருந்துவர். 

ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு நாளன்று படப்பிடிப்புக்கு வரும்போது, எம்ஜிஆர் ஒரு கைப்பையோடு வருவார். அதன் உள்ளே தடுப்பை அமைத்து,  ஒரு பக்கத்தில் நூறு ரூபாய் நோட்டுகளும், இன்னொரு பக்கம் பத்து ரூபாய் நோட்டுகளும் இருக்கும்.

அறைக்குள் ஒப்பனை செய்துகொண்டிருக்கும்போது தனக்கு புத்தாண்டு வாழ்த்து கூற வருவோருக்கு  பணத்தை எடுத்து எம்ஜிஆர் கொடுப்பார். 

புத்தாண்டு நாளன்று கைராசிக்காக, எம்ஜிஆரிடம் பணம் பெறுவதை வழக்கமாகவும் வாடிக்கையாகவும் திரைத் துறையினர் கொண்டிருந்தனர். 

அப்போது பணம் பெற வருகை தரும்  கே.பாலாஜியிடம் எம்ஜிஆர்  ""படம் எடுக்கிறதென்னவோ தம்பியை (சிவாஜி) வச்சி, பணம் வாங்குகிறது மட்டும் அண்ணன்கிட்டேயா? வாழ்க!'' என்பார். இதை கேட்டு பாலாஜி சிரித்துகொண்டே நழுவி விடுவார். ஆனால் அவர், "உங்களையும் (எம்ஜிஆர்) வைத்து ஒரு படம் எடுப்பேன்' என்று சொல்ல மாட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.