ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 15 ஆண்டுகள் பணியாற்றிய டிம் குக் அந்தப் பதவியிலிருந்து விலகுகிறார்.
உலகின் பிரபல தொழில்நுட்ப சாதனங்கள் விற்பனை நிறுவனமான ஆப்பிளை ஸ்டீவ் ஜாப்ஸ் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பின்னர், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக டிம் குக் பதவியேற்றார்.
15 ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக டிம் குக் பணியாற்றியுள்ளார். இவர் தலைமையின் கீழ் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு 3.6 டிரில்லியன் டாலருக்கும் மேலாக உயர்ந்தது.
இந்த நிலையில், தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து இந்தாண்டு டிம் குக் பதவி விலகுகிறார். புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஹார்டுவேர் பிரிவின் தலைவரான ஜான் டெர்னஸ் பொறுப்பேற்கவுள்ளார்.
வருகிற செப். 1, 2026 முதல் ஜான் டெர்னஸ் பதவியேற்கவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
50 வயதான ஜான் டெர்னஸ்,கடந்த 25 ஆண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பின்னணியில் ஒரு முக்கியத் தூணாகச் செயல்பட்டு வருகிறார். மேக், ஐபேட், ஏர்பாட்ஸ் மற்றும் சமீபத்திய விஷன் ப்ரோ ஹெட்செட் உள்ளிட்ட ஆப்பிளின் முதன்மை தயாரிப்புகளின் வடிவமைப்பில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.
50 வயதான ஜான் டெர்னஸ் 2001-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்தார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இதில் கடந்த 5 ஆண்டுகளாக ஐபோன், ஐபேட் மற்றும் மேக் ஆகியவற்றின் அடிப்படைப் பொறியியல் பணிகளில் இவருடைய பங்களிப்பு இருந்த நிலையில் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி காலத்தில் ஒரு திருப்புமுனையாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆப்பிள் நிறுவனம் முழுமையாக கவனம் செலுத்திவரும் நிலையில் பொறியாளரான டெர்ன்ஸ் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது புதிய மாற்றங்களைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Tim Cook to exit as Apple CEO after 15 years
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!

ரூ. 47,000 அதிரடி தள்ளுபடியில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் வாங்கலாம்! எப்படி?

இண்டிகோ புதிய சிஇஓ நியமனம்

பொதுத்துறை எஃகு நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு அசோக் குமார் பாண்டா பரிந்துரை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

