பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இரட்டை இயக்குநர்கள் இயக்கும் லாக்கர்

இரட்டை இயக்குநர்களான ராஜசேகர் -  யுவராஜ் கண்ணன் எழுதி இயக்கி வரும் படம் 'லாக்கர்'. விக்னேஷ் சண்முகம்,  நிரஞ்சனி அசோகன்,  நிவாஸ் ஆதித்தன், சுப்ரமணியன் மாதவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

News image
Updated On :29 ஜூலை 2023, 6:30 pm

இரட்டை இயக்குநர்களான ராஜசேகர் -  யுவராஜ் கண்ணன் எழுதி இயக்கி வரும் படம் 'லாக்கர்'. விக்னேஷ் சண்முகம்,  நிரஞ்சனி அசோகன்,  நிவாஸ் ஆதித்தன், சுப்ரமணியன் மாதவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்காக பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை படமாக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.  வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஹாலிவுட் சினிமாக்கள் அதிகமாக பயணப்படும் ஹிஸ்ட் ஜானர் பாணியில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிப்பதற்கான திட்டங்கள் நிறைய இருக்கும். 

அது மாதிரியான கதை.  பணத்துக்காக எதையும் செய்ய துணிந்தவன். எதற்காக அவனுக்கு இவ்வளவு வெறி, வேட்கை... இதைச் சொல்வதுதான் படம். பணம், மக்கள் மத்தியில் ஒரு நெருக்கடியை உருவாக்கி வைத்திருக்கிறது. அன்பாக வாழ்வதை விட இங்கே பணக்காரனாக வாழத்தான் எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். எல்லாருக்குமே நாளைக்குக் காலையில் பணக்காரன் ஆகி விட வேண்டும் என்று ஆசை.

அந்த ஆசையைத்தான் ஃபோர்ஜரி ஆள்கள் சுலபமாக அறுவடை செய்து விடுகிறார்கள். மாதத்துக்கு ஒன்று, ஏரியாவுக்கு ஒன்று என நடந்த மோசடி வேலைகளை பேப்பரில் படித்து, அது தொடர்பான ஆள்களைச் சந்தித்து எழுதப்பட்ட கதை இது.  சென்னை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.