சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் பழவேற்காடு ஏரியின் நடுவே அமைந்துள்ள தீவை பழவேற்காடு ஏரியிலிருந்து போட்டிங் மூலம் அடையலாம். இந்தத் தீவு முக்கிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. இந்த அழகிய தீவு ஆங்கிலத்தில் ஹிடன் ஐலாண்ட், லேக் ஐலாண்ட் என்று அழைக்கப்படுகிறது. நண்பர்கள், குடும்பத்தினருடன் ஒரு நாள் பிக்னிக் செல்ல இது ஒரு அருமையான இடம்.
அடையாறு ஆற்றின் நடுவே அமைந்துள்ளது க்விபிள் தீவு. இந்தத் தீவுக்கு சாந்தோம் நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம். சால்ட் வாட்டர் லகூன்களில் உருவான நான்கு சிறிய தீவுகளில் இது மிகப் பெரியதாகும். பிரெஞ்சு தலைமையிலான இந்தியப் படைகளுக்கும் நவாப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற போருக்குப் பிறகு ஐரோப்பியர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு கல்லறை இத்தீவின் நடுவே கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து 70 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள பழங்கால கோட்டை கடற்கரையும் வங்காள விரிகுடாவும் ஒன்று சேரும் இடத்தில் சிறு சிறு தீவுகள் உருவாகியுள்ளன. ஆலம்பாறை தீவு 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டு, கோட்டை துறைமுகமாக செயல்பட்டது. இ.சி.ஆர். சாலையில் ஒன்றரை மணி நேரத்தில் ஆலம்பாறை கோட்டை உள்ள இடைக்கழிநாடை என்ற இடத்தை அடைந்து விடலாம்.
அடையாறு ஆற்றங்கரையில் உடைந்த பாலத்திக்கு அருகே அமைந்துள்ளது திமிங்கத் தீவு. இங்கு ஒரு போட்டிங் கிளப்பும் செயல்படுகிறது. ஆற்றில் நீர் மட்டம் நன்றாக இருக்கும்போதெல்லாம், போட்டிங் ஏற்பாடு செய்யப்படுகிறது. அடையாறு பாலத்துக்கு அப்பால் உள்ள ஆறு தெளிவாகத் தெரிவதுடன், பல புலம்பெயர் பறவைகளையும் நாம் இங்கே காணமுடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


