நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா

தி ரூட் மற்றும் தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ரிவால்வர் ரீட்டா'.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:25 am

தினமணி

தி ரூட் மற்றும் தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ரிவால்வர் ரீட்டா'.  கீர்த்தி சுரேஷ் கதையின் முதன்மை பாத்திரம் ஏற்று நடிக்கிறார். "சென்னை 28', "மாநாடு' உள்பட பல வெற்றிப் படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய  சந்துரு இப்படத்தை எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே  சரஸ்வதி சபதம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  அனைத்து ரசிகர்களையும் கவரும் வித்தியாசமான கமர்ஷியல் படமாக  ரிவால்வர் ரீட்டா படத்தை உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.  

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  நடிகை சமந்தா இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார்.  கீர்த்தி சுரேஷ் துப்பாக்கியுடன் அசத்தலாக இந்தப் போஸ்டரில்  காட்சியளிக்கிறார்.  பழைய கால போஸ்டர் பாணியில் இருக்கும் இதில் பெயிண்டிங் போல வித்தியாசமான முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து இணையத்தில் வைரலாகி வருகிறது. மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் தொழில்நுட்பக் குழு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

படத்தின் ஒளிப்பதிவு இயக்குநராக  தினேஷ் கிருஷ்ணன்  பணியாற்றவுள்ளார். படத்தொகுப்பாளராக  பிரவீன் ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார். சண்டை பயிற்சி இயக்குநராக  திலீப் சுப்பராயன் பணியாற்றவுள்ளார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.